பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(46)



20. சூரிய உதயம்.

சூரியன் உதித்து வெளிச்சமாகிற காலத்தைப் பகல் என்கிறோம். சூரியன் மறைந்து வெளிச்சம் இல்லாமல் இருக்கிற காலத்தை இராத்திரி என் கிறோம். சூரியன் உதிக்கும் காலத்துக்கு விடியற் காலம் என்று பெயர்.

விடியற்காலத்தில் பக்‌ஷிகள் கூவத் தொடங்கும். மேலே உள்ள படத்தைப் பார். அதில் சூரியன் உதயமாகிப் பிரகாசிக்கிறது. சூரியன் மேலே வரவர, புஷ்பங்கள் மலரும்.

பொழுது விடிந்தவுடனே நாம் படுக்கையை விட்டு எழுந்திருப்பது நல்லது. அப்பொழுது காற்று குளிர்ந்து வீசும். புத்தி தெளிவாய் இருக்கும் உடம்பு கலகலப்பாய் இருக்கும்.