பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

197


எழுந்து வடிவம் பெற்றதும், இலக்கண நடை உடையனவாகக் கருதப்பட்டன. நாளடைவில் அவ்வுருவங்கள் பேச்சு மொழியில் சிதைந்து வழங்கப்படலாயின. பின்னர், சிதைந்த அந்தத் தமிழ் வடிவங்களே, நல்ல இலக்கண நடை உடையனபோல் கருதப்பட்டு, வேறு-வேறு மொழிகளாக மாறிப் பிரிந்தன. இவ்வாறு சிதைந்து பிரிந்ததற்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

தமிழ் -- தெலுங்கு -- கன்னடம் -- மலையாளம் --
அண்ணன் அன்ன அண்ணா --
தம்பி தம்புடு தம்ம --
அக்காள் அக்க அக்க --
தாத்தா தாத தாத --
மாமன் மாம மாவ அம்மாவன்
ஊண் -- ஊண்ட ஊண்
அது,இது,எது அதி,இதி,எதி அது,இது,எது அது,இது,எது
மழை வானெ மளெ மழ
பகல் பகலு அகிலு பகல்
யார் எவரு யாரு யாரானு
ஊர் ஊரு ஊரு ஊரி
ஊருக்கு ஊரிக்கி ஊரிகே ஊரிலே
கண் கண்ணு கண்ணு கண்ணு
மூக்கு முக்கு மூங்கி மூக்கு
வாய் -- பாயி வாயி
செவி செவ்வு -- செவி
நாய் -- -- நாயி
தலை தல தலெ தல
எருது, காளை எத்து எத்து காள
ஏழு ஏடு ஏளு ஏழு
கூழ் கூடு கூளு கூழு