பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

31


காணலாமே தவிர, மக்கள் மந்தைக்கு நடுவே நடை முறையில் காணுதல் அரிது.

வள்ளுவர் கூறியுள்ளபடி, இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்யாததனால்தான் அந்தக் குறளுக்குப் பெரிய மதிப்பு இருக்கிறது. இனி அந்தக் குறளுக்கு வேலையில்லாத படி - தேவையில்லாதவாறு மக்கள் நடைமுறையில் இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றும் காலம் எக்காலமோ-அக்காலம் நற்காலமாகும் - பொற்காலமுமாகும். 

[1]6. ஒரே உலகம்

ஒரே உலகம் என்றால் என்ன? இந்த ஒரே யுலகத்திற்கும் ஐக்கியநாட்டு அவைக்கும் தொடர்புகள் இருக்கின்றனவா? ஒரே யுலகம் என்பது நமக்குத் தேவைதானா? தேவையாயின் இவ்வொரேயுலகம் உருப்படுமா? ஆகிய இன்ன பிறவற்றை நாம் சிந்தித்து ஆராய்ந்து முடிவிற்கு வரவேண்டும்.

முதற்கண், ‘ஒரேயுலகம்’ என்பதனை எடுத்துக் காட்டுக்களின் வாயிலாக விளக்க வேண்டும்.

அன்றைய உலகம் மொழிவாரியாகப் பல நாடுகளாகப் பிரிந்து ஆளப்பட்டு வந்தது. வங்கநாடு வங்காள மொழி பேசுநர்க்கும், ஆந்திரநாடு தெலுங்குமொழி பேசுநர்க்கும், தமிழ்நாடு தமிழருக்கும் ஆக, இவை போன்று பல நாடுகள் தத்தம் மொழிவாரியாகப் பிரிந்து தனித்தனியாக ஆளப் பட்டு வந்தன.


  1. (புதுவை ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஐ.நா. நாளன்று ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் இது)