பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

ரசிகமணி டிகேசி


 தக்க மனுஷர்கள் மாத்திரம் மிஞ்சி இருந்தார்கள். கமார் முன்னூறு பேர் பல ஊர்களிலிருந்து வந்திருந்தவர்கள் நண்பர் வெங்கிட்டாச்சாரி, அம்பாசமுத்திரம் சிவானந்தம் பிள்ளை இன்னும் பலர் வந்திருந்தார்கள். எல்லாரும் ஆத்திரத்தோடு இருந்தார்கள். அபிமானிகள் என் பேச்சை உணர்ந்து அனுபவித்தார்கள். ஆனால் கூட்டத்தைக் கலைத்துக்கொண்டு செய்தார்களே அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

குமரகுருபரர் திருவடி வாழ்க

28 ஆம் தேதி குற்றாலம் வந்து சேர்ந்தேன். அன்று நண்பகலிலேயே திருமதி ஆர்.வி. சாஸ்திரி அம்மாளும் குமாரரும் வந்திருந்தார்கள். நல்ல சங்கீதம், நல்ல கம்பெனி. அருவி திம்திம் என்று விழுகிறது. கூட்டமோ இல்லை. பொழுது நன்றாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.

டிசம்பர் வரை கீழ்ப்பாக்கத்து அன்பர்கள் லீவ் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். டிசம்பர் 2 வாக்கில் சென்னைக்குப் புறப்பட வேண்டும்.

தேவகோட்டை தமிழிசைச் சங்கத்தில் ராஜேஸ்வரி பேசுவதாக அழைப்பிதழில் குறிப்பிட்டிருநத்து. நன்றாய்ப் பேசியிருப்பாள். ஆடவர்கள் ஆசிரியர்கள் எல்லாரும் இனிமேல் யோசனை பண்ணியே பேச வேண்டும் என்பதை அறிந்திருப்பார்கள். யோசனை இல்லாமல் பேசுவதே பேச்சு என்றல்லவா எண்ண ஆரம்பித்து விட்டார்கள் நண்பர்கள்.

என் காலிலிருந்த புண் குணமாகப் பார்க்கிறது. நாலைந்து நாளில் குணமாய்விடும் என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள். அது குணமாய்விட்டால் ஆட்டோட்டத்தைக் கொஞ்சம் ஜாஸ்திப்படுத்திக் கொள்ளலாம், வேலூருக்கு வரலாம். இன்னும் என்ன எல்லாமோ செய்யலாம்.