பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

137


திருக்குற்றாலம்
தென்காசி
10.9.50

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

சென்னை, கோவை மறுபடியும் சென்னை என்றெல்லாம் சுற்றிவிட்டு நேற்று குற்றாலம் வந்து சேர்ந்தேன்.

இப்போதும் இங்கே நல்ல சாரல், அருவியில் நல்ல வெள்ளம். கூட்டம் கிடையாது. குற்றாலத்தை அனுபவிக்க வேண்டுமானால் இதுதான் பருவம்,

நாங்கள் ராஜபாளையம் பாரதிவிழாவை ஒட்டி இங்கே வருகிறீர்கள்.

ராஜபாளையத்தில் விழாவை இந்த மாதம் 17 ஆம் தேதி வைத்திருக்கிறார்கள். நம்மோடு மகாராஜனும் கலந்து கொள்ளுகிறார்கள். மூன்று பேர் போதாதா தமிழுக்கு. அனேகமாக முத்துசிவனும் வருவார்கள்.

ராஜேஸ்வரியும் குழந்தையும் செளகரியமாய் இருக்கிறார்கள். மிக்க சந்தோஷம் நடராஜ்தான் தெலுங்கு தேசத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருக்கட்டும். சீக்கிரம் தமிழ்நாட்டுக்கு வந்துவிடுவார்கள். தமிழ் ஏக்கம் அவர்களுக்கு அதிகமாய்க் கொண்டிருக்கிறது. தங்களுக்கு மலையாளத்தில் ஆய்க் கொண்டிருந்த மாதிரிதான். அப்படி அனுபவித்துப் பார்த்தால்தான் தமிழின் சுவை பெருமை எல்லாம் தெரியவரும்.

தமிழ்ப் பண்டிதர்களைக் கொஞ்சம் தமிழ்நாட்டுக்குப் புறம்பேயுள்ள நாடுகளுக்கு அனுப்பினால் அவர்களுக்கும் தமிழின் மேல் ஆசை உண்டாய்விடும்.