பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

35


போவதற்குக் காரணம் கலை உணர்ச்சி இல்லாததுதான் என்று நேற்று மாலையில் அடையாறு கலாஷேத்திரத் திறப்புவிழாவில் சொன்னேன். ரொம்ப உண்மை. நேற்று பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது தங்கள் கட்டுரைதான் ஞாபகத்துக்கு வந்தது. நம்மடைய தமிழ்நாட்டில் கலைச்செல்வம் எவ்வளவோ இருந்தும் நம்மவருக்கு அதைப் பற்றிய உணர்ச்சியே இல்லை. தங்கள் கட்டுரையைப் பார்த்து ஏதோ கோணலும் சொத்தையுமான உருவங்களுக்கு இவ்வளவு வார்த்தைத் தூபமெல்லாம் வேண்டுமா என்று கூடச் சொல்லுவார்கள். நம்முடைய முன்னோர்கள் எவ்வளவெல்லாமோ கஷ்டப்பட்டு பொருள் விரயஞ் செய்து சிற்ப வேலைகள் செய்து முடித்தார்கள். அவர்களும் பைத்தியக்காராகள்தானே. ஆமா சடையப்ப வள்ளலும் கம்பருமே பைத்தியக்காரர்கள்தான் அவர்களுக்கு. ஆகையால் தங்கள் கட்டுரை நம்மவரில் சிலருக்காவது சிற்பக் கலையின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தும் நல்ல காரியமே.

கம்பர் பற்றிய என்னுடைய ரேடியோ பிரசங்கங்களை திருச்சி நிலையத்தார் புத்தகமாக வெளியிடுவதாகச் சொன்னார்கள். யுத்தம் காரணமாக ஒருக்கால் அதை ஒத்திவைத்துவிடலாம். ஆனால் புதுமைப் பதிப்பகத்தாருக்குத் தாங்கள் அதை வெளியிடவேண்டும் என்ற ஆசை. ஆகையால் எப்படியாவது வெளிவந்துவிடும் புத்தகமாக. தங்களுக்கு நிச்சயமாய் ஒரு புத்தகம் வந்து சேரும்.

நான் இன்று திருச்சிக்குப் போகிறேன். நாளை இரவு ஏழு மணிக்கு ரேடியோவில் முத்தொள்ளாயிரத்தைப் பற்றிய பேச்சு. பேச்சு முடிந்ததும் நாளை இரவே செங்கோட்டை பாஜஞ்சரில் திருநெல்வேலிக்குப் போகிறேன். கோயில்பட்டிக்கு காலை (திங்கள்) 6 மணிக்கு வந்து சேருகின்றது. போகும்போது இறங்க முடியவில்லை. திரும்பும்போது 7.11.39 அல்லது 8.11.39 வாக்கில்