பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

ரசிகமணி டிகேசி


எட்டயபுரத்தில் நாலுநாள் அல்லவா தங்க எண்ணினோம். ஆனால் கல்கியை நேற்றே புறப்பட்டு சென்னைக்கு வரும்படியாக சதாசிவம் தந்தி அடித்தார்கள். அதனால் நேற்றே இருவரும் எட்டயபுரத்தி லிருந்து புறப்பட்டுவிட்டோம். கல்கி நேரே சென்னைக்குப் போய்விட்டார்கள். நான் இங்கே திருச்சியில் இறங்கிக் கொண்டேன்.

இன்றும் நாளையும் இங்கே தங்கிவிட்டு நாளை சாயங்காலம் நேமத்தான்பட்டிக்குப் புறப்பட உத்தேசிக்கிறேன். நாளை நின்றுதானே கலியாணம்.

நேற்று இரவு 11 மணிக்கு இங்கே ரிடையரிங் ரூமுக்குள் நுழைந்தேன். ஒரு அழகான முகம் கொண்ட இளைஞர் சர்ட்டுடன் வராந்தாவிலிருந்து உள்ளே வந்து என்னை வரவேற்றார். பார்த்த சாயல் இருந்தது. ஆனால் அடையாளம் தெரியவில்லை. ஜம்பத்தைத் துரக் கட்டி வைத்துவிட்டு தெரியவில்லையே என்று சங்கோஜத்துடன் சொன்னேன்.

பதில் குற்றாலத்திற்கு வந்திருக்கிறேன் அல்லவா என்று வந்தது. பூர்வ வாசனை தென்பட்ட மாதிரி இனந்தெரிந்துவிட்டது. கல்லாக்கோட்டை ஜமீன்தார் அவர்கள்தான். வேறு யாரும் இல்லை. -

பிறகு தங்களைப் பற்றிய பேச்சு எல்லாம் வந்துவிட்டது. தங்களைப் புதுக்கோட்டையில் எதிர்பார்த்தாகவும் சொன்னார்கள். இன்று காலையும் பேசிக் கொண்டிருந்தேன். பள்ளிக்கூடம் வைக்க வேண்டும் என்பதாகவும் அதற்குத் தங்களைக் கலந்துகொண்டு வேண்டிய காரியங்களைச் செய்யவேண்டும் என்பதாகவும் சொன்னார்கள். அவர்களும் நாளை வரை இங்கே இருப்பார்கள்.

அனேகமாய் நானும் சென்னைக்குப் போய்விட்டுத்தான் குற்றாலம் திரும்ப வேண்டிவரும். எதற்கும் கல்கியின் தந்தியை நேமத்தான்பட்டியில் எதிர்பார்க்கிறேன்.