இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடிதங்கள்
95
வீட்டில் அம்மாளும் மற்றவர்களும் செளகரியந்தானே. ராஜேஸ்வரிக்கும் பரீட்சைகள் எல்லாம் முடிந்திருப்பதால் உடம்பு தேறியிருக்கும். அவளுடைய பரீட்சையை எண்ணினால் எனக்கே பயமாய் இருக்கிறது. ஆனால் அவள் பயப்பட வேண்டியதே இல்லை. பரீட்சை அவளுக்கு ஒரு பொருட்டாய் இருக்க வேண்டியதே இல்லை. எனக்கு பரீட்சை என்றால் ஒரே பயந்தான். எல்லாப் பாடங்களும் ஒரே அமாவாசையைத்தான் இருக்கும். மற்றவை பின்பு.
தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்
❖❖❖