உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி சுகதேவ்: அதற்கென்ன?

12 19 திருசங்கு: மரம் பழுத்தால் வௌவால்களை வா என்றா அழைக்கும்! சுகதேவ்: அதுபோல? திருசங்கு: என் மகள் பருவமடைந்து விட்டாள் பயல் கள் வலை வீசுகிறார்கள். அதற்குத்தான் ஓலை எழுதி யிருக்கிறான் இந்த உதவாக்கரை. என் மகளின் அழ கென்ன-குணமென்ன, அத்தான் முறைக்காக மட் டும் அந்தப் பயல் உரிமை கொண்டாடி விட முடி யுமா தம்பி! சுகதேவ்: ஒகோ ! அவ்வளவு அழகா உன் மகள்? திருசங்கு: நீங்கள் பார்த்ததே இல்லையா? சுகதேவ்: இல்லையே .. உன் மகளின் பெயர் என்ன? திருசங்கு: முத்தாயி ! முத்தாயி என்றால் முத்தாயி தான் ! சுகதேவ்: உம்! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு! திருசங்கு: இல்லை தம்பி, இது காக்கை அடைகாத்த குயிலின் குஞ்சு! சுகதேவ்: சரிதான்! கறுப்பு நிறமாக்கும். திருசங்கு: நான் குரலைச் சொல்லுகிறேன் தம்பி, முத் தாயி ஒரு எலுமிச்சம்பழம். சுகதேவ்: புளிக்காதே! திருசங்கு: என்ன தம்பி நீங்க - வயசானவனிடம் கிண் டல் பண்ணி உயிரை வாங்குறீங்க! சுகதேவ்: திருசங்கு ! வாயேன் உன் வீட்டுக்குப் போக லாம்!