________________
மு. கருணாநிதி 40 75 காட்சி 21] (தென்றல் மாளிகை வெற்றிவேலனும். வேதாளமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வேதாளம்: நீங்கள் சந்தேகப்பட்டது மிகவும் சரிதான்! என்ன இருந்தாலும் ஒரு நாட்டுத் தளபதி அல்லவா? அவன் கையொப்பமிடும்போது 'முத்தாயி' என்று தவறு எழுதினான் என்றீர்களே, அது தவறுதல் அல்ல - அப்படி ஒரு தையல் இருப்பது உண்மை. வெற்றிவேலன்: பார்த்தீரா ? எனக்குத் தெரியும் அப் ே
போதே! முத்தாயி என்பவளைப் பற்றி இன்னும் ஏதாவது விபரம் உணடா? ஏன் வேதாளம் -- இரு வருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமல்லவா? வேதாளம் : இருக்கலாம், அவள் அரண்மனைக் பாளர் தலைவன் திருசங்குவின் மகள். காப் வெற்றிவேலன்: தொடர்பு இருக்கிற அளவுக்கு துடி யிடையுடைய அழகியோ அவள்? வேதாளம்: அழகுதான்-நல்ல அழகு. வெற்றிவேலன்: சந்தனச்சேரியிலே நாம் தங்கியிருக்கும் போது இப்படித்தான் ஒரு அழகியை எனக்கு அறிமுகப்படுத்திவைத்தான் ஒரு அந்தரங்க நண்பன். வேதாளம்: அப்படியா? வெற்றிவேலன் : நண்பனாயிருந்தாலும். அந்த நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக அவனுக்கு இருபது பொன் பரிசளித்தேன். வேதாளம்: ஓகோ !