உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 இரத்தக் கண்ணீர் வெற்றிவேலன் : முடியுமானால் முத்தாயியை ஒரு முறை சந்திக்க முயற்சிப்போம்-என்ன வேதாளம்? வேதாளம்: அதைத்தான் நானும் யோசிக்கத் தொடங்கி விட்டேன். வெற்றிவேலன் : சபாஷ் ! வேதாளம் - குறிப்பறிந்து செயல் புரிவதில் உமக்கு நிகர் நீரேதான்! அப்போது அங்கே முத்தன் வருகிறான். அவனைக்கண்ட வெற்றிவேலன் பேச்சை நிறுத்தி, வெற்றிவேலன் : என்னப்பா! என்ன வேண்டும்?... முததன் : என்னை மன்னிக்க வேண்டும். வெற்றிவேலன் : விஷயத்தைச் சொல். முத்தன்: சந்தர்ப்பம் சரியில்லை முடியவில்லை. படையில் சேர வெற்றிவேலன் : என்ன விளையாடுகிறாய்.. ... என்னை யாரென்று எண்ணிவிட்டாய்? படையில் சேரவும் விலகவும்- உன்னிஷ்டப்படி நடக்கவும் - அனுமதி கிடையாது இங்கே. ஆளைப்பார்! மலைபோல் இருக் கிறான் - எலிபோல் பயப்படுகிறான். கோழை. முத்தன் : தயவு செய்து அந்த வார்த்தை சொல்லா தீர்கள். நான ஏழையாயிருக்கலாம் -- ஆனால் கோழையல்ல! வெற்றிவேலன் : வாய் நீட்டாதே ! வாள் நீளும்! மரியாதையாக நில்! மரியாதையாகப் பேசு ! முத்தன் : படையில் சேருவதற்கு கட்டாயம் எதுவு மில்லையல்லவா !