பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஏதேனும் ஒன்று கொடுத்தவர் பால்நன்றி எய்துகென்றே ஒதாத நல்லோர்கள் உண்டோ ? நினதருள் ஊற்றத்தினல் பாதாதி கேசம் படைத்தனன் வாழ்வும் படைத் திருந்தேன் ; யாதோதி உன்னைப் புகழ்வது ? சொல்லல் எளிதல்லவே. (30)

எளிதன்று மானிட ராய்ப்பிறத் தல்காண் ; இதனைஎண்ணி அளிதுன்ற நின்அடி போற்றுவ தேகடன் ஆதலினல் களிதுன்ற ரத்ன கிரிவந்து, பால், கருணைஉளாய், துளிவந்த கண்ணி பெருகத் துதிக்கும் துணிவருளே. (31)

துணிவுடை யார்இவர் என்று புகழ்பெற்றுத் துன்னியவர் தணிவரும் ஆற்ற லுடைக்காலன் வந்தால் தயங்குவரே : அணிவுறு நின்மலர்ப் பாதத்தைப் போற்றும் அகம்இருந்தால் நணிவரு வானேஅக் காலன் ? பயந்து நடுங்குவனே. (32)

நடுங்கும் வருந்தும் என் நாயகன் தன்அருள் நண்ணிலன்என் றடங்கும் ; ஒடுங்கும் இவ் வாயிழை பால்அருள் ஆர்ந்துவந்து மடங்குதல் நீக்கி அருளுக ; ரத்தின மாக்கிரியில் கடம்கவிழ் யானை எனநின்ற வேலவ, காருண்யனே ! (33)

காருண்யம் என்பது நின்உரு வே ; அதைக் கண்டுகண்கள் நீர்உண்டு வீழ நெடுநிலம் வீழ்நது நிதம்பணிந்தால் சீர்உண்டு : மித்திரர் தாம்.உண்டு நல்வளச் செல்வம் உண்டு ; பேர்உண்ட நல்லவர் ஆசிகள் உண்டு பெருமைஉண்டே. (34)

உண்டுண் டுடுடுண்டுன் டுண்டெனப் பேரி ஒலிமுழங்கத் தண்டவத் தலைவ ருடன்சென்று சூரனைத் தாக்கிஅவன் கொண்ட படையைக் குலைத்தவ, ரத்னக் குலவரையில் அண்டும் பெருமான், வடிவேற் கரத்தாய், அறுமுகனே. (35)

தாய்குறை சொல்லத் தமர்குறை சொல்லத் தனிமையினால் நோய்பெற்று வாடும்.இந் நேரிழைக் குன்அருள் நோக்குதவாய் , வாய்பெற்ற தாற்பயன் நின்னை வழுத்துதல் வாகுயர்ந்த சேய், ரத்ன வெற்பிற் பொலிந்து சிறந்து திகழ்குகனே. (36)

குகைஎனச் சொல்லும் தகரா லயத்தில் குடியிருப்பாய். நகைமிகு வள்ளிதெய் வானையை அன்பின் நயத்திடுவாய் ; இகலரும் ரத்ன கிரியினிற் பாலன் என இருப்பாய் ; புகலரும் சீர்உடை யாய், நினைப் போற்றிப் புகழுவனே. (37)

12