பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குற்றம் இலாதவர் இவ்வுலக கத்தில் குறைவு ; குற்றம் பெற்றவ ரேபலர் , அஃதை நினைந்து பெரிதும்நையா துற்றநற் சீலர் உறைவிடம் தேடி உயச்செய்குவாய் ; கற்றவர் போற்றும் இரத்தின வெற்புறை காவலனே. (62)

காவல னே, சதி இட்டு நடக்கும் கலாபமுடை மாவல னே, மெய்ஞ் ஞான வடிவாய் மலர்ந்தவனே, பாவலர் போற்றும் இரத்தின நற்கிரிப் பால்உறைவாய், நாவலம் எந்துணை வாழ்த்தும் இயல்பினை நல்குவையே. (6.3)

நல்குர வாலே நலிந்து துயருறும் நன்மக்களைச் செல்களன ளுமல் அரவணைத் தேநற் சிறப்பளிக்க ஒல்லும் படிசெய் தருள்வாய் , இரத்தின ஒங்கல்மிசைச் சொல்லும் புகழொடு நின்றருள் வோய், பெரும் சோதியனே. (64)

சோதிக்க வேண்டா : அடியேன் மிகஏழை சுத்தம்இலேன்; யாதுக்கும் சற்றும் பயன்படல் இல்லேன் இணைந்துநின்றேன்; வா திக்கு நான்உனக் கென்றப யங்கொடு , மாமயிலோய், நீதிக்கு வல்லவர் போற்றும் இரத்ன நெடுங்குன்றனே. (65)

குன்ருத செல்வமும், சோதிலா நெஞ்சமும், கூடும்நண்பர் பொன்ருத நட்பும் பொலிவும்நின் பாதத்தைப் போற்றுவதும், என்றேனும் எக்காலும் நின்னை மறவா இயல்பும்அருள்; நன்ரு னவர்புகழ் ரத்ன கிரியை நயந்தவனே. ( 66)

தவசியாய்ப் போகுதல் வேண்டும்என் றில்லை தனியோகமும் அவசியம் இல்லை : இரத்தின நற்கிரி ஆளும்அவன் நவமலர் போல்அடி தம்மை வணங்கும் நாடிஎன்றும் அவம்இலா தேபோது போக்கிடின் அஃதே அரும்தவமே. (67)

தவத்தாற் சிறந்த திருஞான சம்பந்தர் தாம்முருகன் அவதாரம் என்பர் அவர்பெற்ற பேற்றினை ஆய்ந்துகொண்டு சிவநாத னேஅவன் சேயினைப் போற்றிடும் சிந்தையிலேன் , புவனேசை சேயனே, ரத்னப் பொருப்பினிற் போந்தவனே. (68) போந்தை நெடுமரம் சற்றும் நிழல்இன்றிப் போந்ததுபோல் ஏய்ந்த உதவியை யார்க்கும் செயாத இயல்புடையேன், வாய்ந்தநின் சீறடி வாழ்த்தும் வகையையும் மற்றறியேன் , ஒய்ந்தனன் ; நீ அருள் வாய் ரத்ன ஓங்கலில் உள்ளவனே. (69)

16