பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றாத அன்பும், கொடுமை செய் யாத குணமும், மயல்
ஒன்றாத உள்ளமும், உன்பால் அமையும் உயர்பக்தியும்
நின்றோ நிலவ நினதருள் தந்து நிலைபெறச் செய் ;
பொன்றாப் புகழ்ரத்ன வெற்புறை நின்மல, பூரணனே. (86)

பூரணம் ஆன பொருள்நீ என அறி புத்திதந்தே
ஏரண வும்பண்பு தந்தருள் ; நீ அன்றி ஏதுகதி ?
காரண னே, கரு ணாகர னே, ரத்னக் கல்லவனே,
ஆரணம் எல்லாம் புகழும் பெருமை அடைந்தவனே. ( (87)

அடைந்தவெம் சூரன் தனக்கும் அருள்தந் தவனைஎழில்
மிடைந்துயர் ஊர்தியாய், ஓங்கும் கொடியாய் விளங்க வைத்தாய் ;
சடைந்திடும் நாயேனை உத்தமன் ஆக்கத் தயைபுரிவாய் ;
உடைந்திடும் உள்ளம் இலார்போற்றும் ரத்தின ஓங்கலனே. (88)

ஓங்கும் புகழினால் என்வரும் ? நின்னை உணர்வதின்றித்
தாங்கும் பதவியால் ஓர்பயன் உண்டோ ? தலைசிறந்த
பாங்குடை யாய், ரத்ன வெற்புடைத் தேவ, பரம்பரனே,
நீங்ககில் லாப்புகழ் கொண்டவ னே, சுத்த நின்மலனே. (89)

மலம்மூன்றிற் சிக்கி அறிவிழந் தெள்ளும் மதி உடையேன்
தலம் ஊன்று ரத்ன கிரியுறை பாலக, சற்குணனே,
நலம்ஊன்று பண்பு கொண் டுன்னைப் பணியும் நயம்தருவாய் ;
கிலம் இல் லவர்புகழ் வேலவ, மேலவ, கேண்மையனே. (90)

கேட்டாரும் தேறகில் லாதவன் ; கேளார் கிறி அகற்றான் ;
வேட்டார்க்கு நல்லவன் ; வேண்டுவ ஈந்து விரும்பி அருள்
தேட்டை அளிப்பவன் ; ரத்ன கிரிஉறை தேவன் ; இந்த
ஒட்டைக் குடமாம் உடம்பிற் புகுந்தெனை உய்விப்பனே, (91)

உய்யும் வண் ணத்தை அறிகிலேன் ; தொண்டர் உறையும் இடம்
எய்தப் பணிந்து நின்றனைப் போற்றும் இயல்கற்றிலேன் ;
பெய்யும் மழையாற் பொலிவும் இரத்தினப் பேர்க்கிரியாய்,
வையும் படிஎனை வையாமல் நின்னை வழுத்தவையே. (92)

வழுத்தி வணங்கி அருட்பெயலால்நனை மாண்புடையோர்,
பழுத்த மனத்தினர் ஆகிநின் நல் அருள் பற்றிநின்றார் ;
அழுக்கு மனத்தினன் பாசச் சுழலில் அழுந்துகின்றேன் ;
இழுக்கிலார் போற்றும் இரத்தின வெற்பில் இறையவனே. (93)

19