பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48.

49.

5○.

51.

- நான் காணவில்லை. செய்குவேன் - செய்வேன். சேண் பெறும் - நெடுந்துரம் பரவியிருக்கும். சீர் - புகழ்.

செய்யினில் - வயலில், சீர் பெருமை. பொருள் - செல்வம். கவின் கன்னியை - அழகை உடைய, மணமாகாத கன்னிப் பெண்ணை. மையல் - காதல். மா - பெருமையை உடைய, ஐய - அழகிய, பால வேலன் - பாலமுருகன். அனைத்தும் - யாவும்.

உண்டிடும்போது - நாம் உணவை உண்ணும்போது, உணல் - உண்ணுதல். அறம் - தர்மம். ஆல் அசை நிலை. "விருந்து புறத்ததாத் தான் உண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.” (திருக்குறள்) என்பதை காண்க. பண்டையர் - பழங்காலத்திலிருந்த பெரியோர்கள். தமக்கென் றுலை ஏற்றார்" (ஆசாரக்கோவை , 40). தமக்கு என்று - தங்களுக்காக மட்டும், உலை ஏற்றார் - சோறு சமைக்க உலையை ஏற்ற மாட்டார்கள். பரிவுடனே - அன்புடன் : ஏ அசைநிலை, கொண்ட - மேற்கொண்ட கோலம் - அழகை உடைய திருவுருவத்தை. பணிந்தேன் - வணங்கினேன். விருந்தென - புதியவன் என்று. கொள்ளுவையோ - எண்ணுவாயோ? மண்டு - புகழ்மிக்க வெற்பினில் - பாலமுருகனுடைய மலையில். பால - இளமையை உடைய முருகனே ; அண்மை - விளி. மயிலவனே - மயில் வாகனத்தை உடையவனே.

மயிலினை - நீ வாகனமாகக் கொண்ட மயிலை, ஓங்கார - நல் வடிவு - பிரணவத்தின் நல்ல உருவம் 'ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் (தேவாரம்). என்று உன்னி - என எண்ணி, உயர் - நீண்ட சக்தி வேலினை - ஞான சக்தியாகிய வேலாயுதத்தை 'சக்திதன் வடிவே தென்னில் தடைஇலா ஞானம் ஆகும்' (சிவஞான சித்தியார், 4 : 40.) ஞான உரு-மெய்ஞானத்தின் வடிவம். உணரகிலேன் - உணரும் ஆற்றல் இல்லாதவன். பயில் - காதலுடன் பழகும். வள்ளி - வள்ளி நாயகி. இச்சா சக்தி - மூன்று வகை சக்திகளில் ஒன்று. "வள்ளியிச்சை தேவானை தான்கிரியை" (ஒரு புலவர்). தெய்வானை முருகப் பெருமான் தேவியருள் ஒருவர். படர் - விரும்பும், செயலாய் - செயலை உடையவனே. நயந்திலன் - விரும்பி அறிந்தேனில்லை. என் - என்ன. நயந்தவனே - விரும்பி எழுந்தருளி யிருப்பவனே.

நயப்பும் - விருப்பமும், இரவும் - இராக்காலமும், பகலதும் - பகற் பொழுதும் , அது பகுதிப் பொருள் விகுதி. நண்ணுகிலா - அடையாத இரவுபகல் என்றது சகல கேவலாவஸ்தைகளை , "இராப்பகல் அற்ற இடங்காட்டியான் இருந் தேதுதிக்கக் குராப்புனை தண்டையந் தாள்.அருளாய்", "போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும்உள்ளும் வாக்கும், வடிவும் முடிவும் இல் லாதொன்று.

35