54.
55,
56.
இரத்தின கிரியில் எழுந்தருளியுள்ள வேலவனே - வேலை ஏந்திய திருக்கரத்தை உடையவனே.
வேல் உண்டு - முருகன் திருக்கரத்தில் ஏந்தி உள்ள வேலாயுதம் இருக்கிறது . அது நம்மைப்பாதுகாக்கும். துன்பு இல்லை - ஆதலால் நமக்கு எந்த விதமான துன்பமும் இல்லை ஆகும். மஞ்ஞை உண்டு - முருகனுடைய வாகனமாகிய மயில் இருக்கிறது. இன்னல் - அதை வணங்கினால் நமக்கு ஓர் இடையூறும். விளைவது இல்லை - உண்டாவது இல்லை ஆகும். தால் உண்ட நாவினால் சொல்லும். இடை - முருகனுடைய பலவகையான புகழ்கள். உண்டு - இருக்கின்றன. நாள் தொறும் - ஒவ்வொரு நாளும், ஏத்தி - புகழ்ந்து. ஏ அசை நிலை. தாழ்ந்திடலாம் - முருகனை வணங்கலாம். கோல் உண்ட - அம்பு தைத்த, மான் போல் - மானைப் போல. துயர் கொண்டு - துன்பத்தை அடைந்து நெஞ்சே - என்னுடைய மனமே. நீ குலையுறல் - நீ வருந்தாதே. சேல் உண்ட -சேல் மீனைப் போன்ற. கண் - கண்களை உடைய, வள்ளி நாதன் - வளி யெம்பெருமாட்டியினுடைய கணவாகிய பால முருகன். உளன் - நம்மைப் பாதுகாப்பதற்கு இருக்கிறான். ரத்னச் செங்குன்றில் - செம்மையான இரத்தினகிரியில், ஏ : ஈற்றகை.
குன்றம் எலாம் - மலைகள் எல்லாவற்றிலும், கோயில் கொள் - திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் ; இவற்றை குன்று தோறாடல் என்பர். வேலன் - வேலாயுதத்தைக் கையில் ஏந்திய முருகன் வேல், குழாம் துதிக்க - அடியவர்களின் கூட்டம் வணங்கி வாழ்த்த நன்று - நன்றாக, உயர்ந்து - உயரமாகி, ஏ அசை நிலை ரத்னகிரி - இரத்தின கிரியில். பால நல வடிவில் - நல்ல பால முருகன் வடிவத்தில், ஒன்றினன் - பொருந்தியிருக்கிறான். பால முருகன் அடிமைக்கு - பால முருகன் அடிமை எனும் துறவிக்கு. உயர்வு - சிறப்பை அளித்தான் - கொடுத்தருளினான். கன்று என - பசுவினுடைய கன்றைப் போல 'கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே' என்று பிறரும் கூறுவது காண்க. நின்று - பால முருகனுடைய சந்நிதியிலே நின்று. அவன் - அவனுடைய. தாள் - இரண்டு திருவடிகளையும், பணிந்து - விழுந்து வணங்கி, ஏத்தின் - வாழ்த்தித் துதிசெய்தால். கதி தரும் - நல்ல கதியை அளித் தருள்வான், ஏ அசை நிலை, கட்டளைக் கலித் துறையில் ஈற்றில் ஏகாரம் வரும்.
கதி அறியாத - செல்லும் நல்ல வழியைத் தெரிந்து கொள்ளாத "கதிக்கு வழி காட்டும் கண்ணே" என்று பிறரும் கூறுவது காண்க. குருடனைப் போல - கண் இல்லாதவனைப் போல. ஏ : அசை நிலை. கண் பெறினும் - அடியேன் கண்களைப் பெற்றிருந்தாலும், துதி
37