பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


57.

58.

அறியாமல் - நின்னைத் தரிசித்துத் துதி செய்வதைத் தெரிந்து கொள்ளாமல். இரத்தின கிரிக் குகன் - இரத்தின கிரியில் எழுந்தருளி உள்ள பால முருகனுடைய, சோதி உரு - சோதிமயமான வடிவத்தை "சோதியே சுடரே" என்று மாணிக்கவாசகர் திருவாக்கு இங்கே உணர்தற்கு உரியது. அது பகுதிப் பொருள் விகுதி. ஐ . இரண்டாம் வேற்றுமை உருபு வணங்காமல் - பணியாமல். இருந்திடின் - இருந்தால், வாழ்க்கை - இந்தப் பிறப்பை அடைந்த பயன் - பெற்றதனால் உண்டான பிரயோசனம். எதுவும் - ஏதும். இலது ஆகி - இல்லாததாகி. வீணாய் விடும் - வீணாகப் போய்விடும். என்பது - என்ற கருத்தை. எண்ணு - நினைப்பாயாக. நெஞ்சே - என்னுடைய மனமே.

சேயாம் முருகன் - சேய் என்ற திரு நாமத்தை உடைய முருகக் கடவுள். நமைக் காக்க - அடியவர்களாகிய நம்மைப் பாதுகாப்பதற்கு. என்று - என தன் - தன்னுடைய சிந்தை கொண்டு - திருவுள்ளத்தில் நினைத்து. தேயாப் புகழுடன் - என்றும் குறையாத புகழுடனே. ரத்தின கிரியில் - பால முருகன் அடிமை வணங்கும் இரத்தின கிரியில், திகழுகின்றான் - எழுந்தருளி விளங்குகிறான். நீயோ என்றது தன் மனத்தை. எவர் எவரோ - யார் யாரோ. துணை - நமக்குத் துணை ஆவார்கள். என்று - என நினைவுறுவாய் - நினைப்பாய், ஆயாத - உண்மையை ஆராய்ச்சி செய்யாத, நெஞ்சமே - என்னுடைய மனமே. இவ்வுடல் - இந்தத் தேகம். நில்லாதது - பலகாலம் நிலையாக இல்லாமல் இருப்பது. ஆம் - ஆகும். என்பது - என்ற உண்மையை, "என்பது ஆயாத நெஞ்சமே" என்று பின் முன் ஆகக் கூட்டிப் பொருள் செய்க.

பத்துத் தலையைப் படைத்த - பத்துச் சிரங்களைப் பெற்ற. இராவணன் - இராவணன் என்னும் அரக்கன். பாற்கடலில் - பால் நிறைந்த கடலில், நத்தி - விரும்பி, துயின்றவன் - படுத்திருக்கும் திருமால். அம்பால் - எய்த அம்பினால். பாற் கடலில் துயன்றவன் என்றது இங்கே திருமாலின் திருவவதாரமாகிய இராமபிரானை. இறந்தனன் - இறந்து போனான். நானிலத்தில் - உலகத்தில், அத்தகை - அத்தகைய வல்லவன் - பலத்தை உடையவனும். பொன்றியதை - இறந்ததை அறிந்தாலும் - தெரிந்து கொண்டிருந்தாலும். இன்னும் - இன்னமும், புத்தி - உண்மையை உணரும் புத்தி வந்து - அடைந்து, ஏ அசை நிலை. ரத்ன வெற்போன் - இரத்தின கிரியில் எழுந்தருளிய பால முருகனை. தொழா விடின் - வணங்கா விட்டால், பொற்பு - மேலான குணம். எது வேறு எது இருக்கிறது ?

38