பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68.

69.

70,

முருகன். நலமலர் போல் - நல்ல தாமரை மலர்களைப் போன்ற அடி - திருவடிகளே. தம் : அசை நிலை. ஐ . இரண்டாம் வேற்றுமை உருபு. வணங்கும் - வணங்கித் தொழும். நாடி-அந்தப் பெருமானத் தேடி அடைந்து என்றும் - எக்காலத்திலும், அவம் இலாது - சென்று விணுகப் போகாமல் ஏ : அசை நிலை, போது போக்கிடின் - காலத்தைக் கழித்தால், அஃதே - அதுவே. அரும் தவம் - அரிய தவம் ஆகும்.

தவத்தால் - தந்தை தாயர் சிறந்த தவம் செய்ததனால், சிறந்த சிறப்பை உடைய திருஞான சம்பந்தர் - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். தாம் : அசை நிலை. முருகன் - முருகனுடைய அவதாரம்திரு அவதாரம். என்பர் - என்று அருணகிரி நாதர் முதலிய சான்ருேர்கள் சொல்லுவார்கள் 'உறைபுகலியூரில் அன்று வருவோனே" என்று திருப்புகழில் வருவது காண்க. அவர் - அந்தத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனர் பெற்ற பேற்றினை - பெற்ற நலங்களை ஆய்ந்து கொண்டு - ஆராய்ச்சி செய்து கொண்டு. சிவநாதனை - சிவபெருமானை. அவன் சேயினை - அவனுடைய திருமகளுகிய பால முருகனை. போற்றிடும் - வாழ்த்தி வணங்கும். சிந்தை இலேன் - எண்ணம் இல்லாதவன் யான். புவனேசை - எல்லாப் புவனங்களுக்கும் தலைவியாகிய உமா தேவியாருடைய, சேயனே-திருக்குமாரனே. ரத்னப் பொருப்பினில் - இரத்தின கிரியில் போந்தவனே - எழுந்தருளியிருக்கும் பால முருகனே.

போந்தை நெடு மரம் - உயர்ந்த பனை மரம். சற்றும் - சிறிதளவாவது. நிழல் இன்றி - நிழலே இல்லாமல். போந்தது போல - இருப்பது போல. ஏய்ந்த என்னல் இயன்ற உதவியை - உபகாரத்தை. யார்க்கும் - எவருக்கும். செயாத - செய்யாத இயல்பு உடையேன் - தன்மையை உடையவன் நாயேன். வாய்ந்த வாய்ப்பாக உள்ள. நின் தேவரீருடைய சீறடி - சிறிய திருவடிகளை வாழ்த்தும் - வாழ்த்தி வணங்கும். வகையையும் - முறைகளையும். மற்று - வேறு. அறியேன் - அடியேன் அறியாதவன். ஓய்ந்தனன் - செயல் அற்று நிற்கின்றேன். நீஅருள்வாய் - தேவரீர் திருவருள் பாலிக்க வேண்டும். ரத்ன ஓங்கலில் - இரத்தின கிரியில், உள்ளவனே - எழுந்தருளியிருக்கும் பால முருகனே. .

"உள்ளத்தைச் சொன்னல் உடம்பெரிச்சல்" என்பது ஒரு பழமொழி. உள்ளத்தை - உண்மையை. சொன்னல் - வெளிப்படையாக யாவரும் கேட்க எடுத்துச் சொன்னல். உடம்பு - குற்றம் உள்ளவனுடைய உடம்பு. எரிச்சல் - எரியும் தன்மையை அடையும். உற்ற - அடைந்த நல்லோர் - நல்ல பெரியவர்கள். மெள்ள மெல்ல. தம் நற்றயையால் - தம்முடைய நல்ல கருணையினால், ஏ அசை நிலை. அறிவு விளம்பினரேல் - அறிவுரையை

42