பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94.

95.

96.

'இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" (திருக்குறள், கடவுள் வாழ்த்து, 5).

இறையவன் - கடவுள் ; எங்கும் தங்கியிருப்பவன் என்றும் ஆம் (இறுத்தல் - தங்குதல்). அருளின் மலையே - அருளில் மலைப்போல் இருப்பவனே 'அறிந்தோர் சொல் மலை' (திருமுருகாற்றுப்படை, 263). எழில் ஏற்றம் உளாய் - பிறருக்கு இல்லாத அழகின் உயர்வை உடையவனே. மறையவனே - வேதத்தால் போற்றப்படுபவனே வேதமாக இருப்பவனே எனலும் ஆம் அந்தணனே எனலும் ஆம் , "வேத முதல்வன் என்ப" (நற்றிணை, 1). பால - பாலமுருகனே. மணம் கமழும் - நல்ல வாசனை வீசும். நிறை கடப்பந்தார் - அழகு நிறைந்த கடம்பமலர் மாலையை அணிபவனே - மார்பில் அணிபவனே. என்றும் - எக்காலத்திலும். நின்மலனே - மலம் மூன்றும் இல்லாமல் இருப்பவனே. உறை - உறைந்த தயிரைக் கடைமத்தென - தயிரைக் கடையும் மத்தைப் போன்று, "ஆயர் மத்தெறி தயிரின் ஆயினார்' (சீவகசிந்தாமணி , 421) ; “ததிஉறும் மத்திற் சுழலும்என் ஆவி தளர் விலதோர், கதிஉறு வண்ணம் கருதுகண் டாய்" (அபிராமி அந்தாதி, 7), உயச்செய்வை - உஜ்ஜீவனம் அடையச் செய்தருள்வாயாக.

செய்வது ஒன்று இன்னதென - உய்வதற்கு ஏற்ற செயல்களைச் செய்யும் செயல் ஒன்று இதுதான் என்பதை அறிந்து. அறியேன் - தெரிந்து கொள்ளாதவன் அடியேன். உய்வதை - உஜ்ஜீவனம் அடைவதை எண்ணி - நினைந்து, வணங்கிலன் - அடியேன். தேவரீரை வணங்கவில்லை. துர்த்தர் - கெட்டவர்கள் ; காமுகர் எனலும் ஆம் (திவாகரநிகண்டு). உறவு - நட்பை பெய்வது போல - மழையாய்ப் பெய்வதைப் போல ; 'ஒல்லாது வானம் பெயல்’, "பெயலும் விளையுளும் தொக்கு (திருக்குறள், 599, 545). அருள் தருவாயோ - திருவருளை வழங்குவாயோ? பிறப்பு இலனே - பிறப்பு இல்லாதவனே. "அறவன் பிறப்பிலி" (திருமந்திரம், 1616). செய் நலம் உள்ள - வயல்கள் நல்ல விளைச்சலை உடைய. இரத்தின வெற்பு உறை - இரத்தினகிரியில் எழுந்தருளியிருக்கும். சேவகனே - வீரனே : "சேவகன் ஆகித்திண்இலை ஏந்தி" (திருவாசகம், 2.81).

முப்புரத்தை - மூன்று புரங்களை பொன் வெள்ளி இரும்புகளால் செய்யப்பட்டனவும் சிவபிரானால் எரிக்கப்பட்டனவும் விண்ணிற் சஞ்சரித்தனவுமான மூன்ற நகரங்களை இவற்றின் தலைவர்கள், வித்யுன்மாலி, தாரகாட்சன், மாவலிவாணன் என்பவர்கள். தரு -

52