{{JO,
1 O i.
102.
iO3,
புங்கவன் - தூய்மையை உடையவன் ; சிறந்தவன் எனலும் ஆம்; 'அமரர் புங்கவன் புந்தியின் ஓர்ந்தனன்" (காசி கண்டம், துருவன் தவஞ்செய் படலம், 1), ஈசன் - பால முருகன். போக்கு - கதி: புகலும் ஆம் 'இலங்கை போக்கற (கம்பராமாயணம், மாயாசனகப் படலம்). இங்கு - இவ்வுலகத்தில், நீசக் குணத்துடன் - இழிவான குணத்தோடு. இரு - இருப்பாயாக. எனை - அடியேனை. ஏசுவையோ - பழிப்பாயோ ? எங்கு - வேறு யாரிடம். இனி - இனிமேல். போகுவேன் - போவேன். எவ்வாறு - எப்படி நல் நலம் - நல்ல குணங்களை எய்துவன் - அடைவேன். பொங்கிய - மிகுதியாக உள்ள போதகனே - குருவே, ‘நியதிபுரிந் தருள்வான் போதகன் (சைவ சமய ஆசாரக் கோவை, 30).
போதனை செய்து - உபதேசம் செய்தருளி. புகல் பெற்று - தஞ்சம் அடைந்தவனாக ஏற்றுக்கொண்டு. சாதனை - சாதனங்கள் ; காரியத்தைச் சாதித்தல் 'தவமார் சாதனை (பெருங்கதை,
மகத காண்டம், 4 : 60), பழக்குவார் - பழக்கத்தை உண்டாக்குபவர்களை கண்டிலன் - அறியேன். தாலம்-பூமி. வேதனையை - துன்பத்தை, "வேதனை பெருகி'
(சீவகசிந்தாமணி, 2506). வீணே - ஒரு காரியத்தையும் சாதிக்காமல். அழிதல் - இறந்து போதல், விதி கொல் - தலைவிதியோ ? மாதலம் பெருமையைப்பெற்ற தலமாகிய இரத்தினகிரியில், மேவிய - எழுந்தருளிய, மாதவனே - கடவுளே ; முனிவனே எனலும் ஆம் , “மாதவர் நோன்பும் மடவார் கற்பும்" (மணிமேகலை, 22 : 208).
மையல் மண்டி - மயக்கம் கொண்டு மாதர்பால் கொள்ளும் காமம் எனலும் ஆம் : "மையல்செய் தென்னை மனம்கவர்ந் தவனே என்னும் (திருவாய் மொழி, 2 : 6). மாதர்கள் - பெண்கள். ஈவார் - கொடுப்பார். பூதலம் - பூமி. போற்றும் - புகழ்ந்து வணங்கும். புண்ணியனே - கடவுளே. நீதமுடன் முறையாக.
நினைந்தொறும் - நினைக்கும் போதெல்லாம். காண்தொறும் - காணும் போதெல்லாம். பேசும் தொறும் - பேசும் பொழுதெல்லாம். இன்பம் நேரும் - இன்பம் உண்டாகும். எனும் - என்று சொல்லும், வினைத்தொகை - பாவக்கூட்டங்களை, போக்கிய - தவிர்த்த, மாணிக்கவாசகர் - திருவாதவூரடிகள், மெய் உரையை - உண்மையான வார்த்தையை, இங்கே குறிப்பிட்டது, 'தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே,
54