6λசிவ சிவ
தன்கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே.
தவத்திரு குன்றக்குடி-623 206 குன்றக்குடி அடிகளார் இராமநாதபுரம் மாவட்டம்.
தொலைபேசி: குன்றக்குடி-27 நாள் : 15.7.1984. வாழதது ஓங்கி உயர்ந்த குன்றுகள் தோறும் குன்றக் குடியின் குன்றின் உச் சியிலும் அலைகடற் கரையின் எழிலிடம் மீதும் ஏதும் அறியா எமதித யத்தும் எழுந்தருளச் செய்யும் எழில்மிகு செவ்வேள் இளைய குமரனாய், இரத்தின கிரியில் பாங்குடன் அமர்ந்து பால முருகன் அடிமையின் துய அன்பினை நுகர்ந்து இனிதருள் புரியும் ஏற்றமார் இயல்பினன் ; வாகீச கலாநிதி வண்டமிழ்க் கவிஞர் சகமெலாம் போற்றும் சகந்நா தன், அவ் அந்தமில் பொருளுக்கு அந்தாதி பாடினன். மொழிக்கு மொழிதித் திக்கும் பாடலாய் நின்றுருகிப் பாடற்கோர் நெஞ்சுருக்கும் பாடலாய் அமைந்தஅந் தாதியை அனுதினம் போற்றி ஓதுக : 'நெஞ்சே உனக்கொன்று சொல்லுவன்' என்றே அழைத்து இனியநற் றமிழால் தூயவன் துணையடி தொழுதிடச் செய்திடும் நயமிகு பாடல் நானிலம் வாழிய ! 'விதியே, விதியே,' என்றுவெந் துயரில் செத்திடும் மாந்தரைச் சேர்த்தனைத் தெடுத்து 'விதியையும் வெல்லலாம் (24) வேலன் துணையினுல் எனும்துணி வதனை எடுத்து மொழிந்து தலையெழுத் தழித்திடும் தகுநூல் வாழிய ! செவ்வேள் திருவடி தோய்ந்தநெஞ் சமைவொடும் செந்தமிழ் பழகும் சிறந்தநன் னவொடும் ஆசு கவிகள் அளப்பில பொழியும் முகிலெனத் திகழும் தகைசகந் நாதன், பைந்தமிழ்ப் பால முருகன், இதுயத்(து) ஊற்றெழும் அன்பில் உவந்து குளித்து விளையா டிடும்நம் வேலன், இரத் தினகிரி அமர்ந்தருள் செய்யும் ஐயனின் மாண்பார் அருளினை அள்ளி வழங்கிடும் அந்தமில் அந்தாதி நந்தமிழ்க் கனியே : (ஒ-ம்) அடிகளார். அருள் மாமுனிவர் தவத்திரு. பாலமுருகனடிமை சுவாமிகள் அவர்கள் இரத்தினகிரி, கீழ்மின்னல்-632517. வேலூர் மாவட்டம், தமிழ்நாடு.