பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


எவனொருவன் தன் வாயிற் கதவை திறந்து வைத்து முன்னடி எடுத்து வைக்கிறானோ, அவன் வாழ்த்துகளைப் பெறுகிறான். -க.கொ

மயக்கமும் துயரமும் ஆட்சி செலுத்தாத ஒரு நிலப் பகுதியுள்ளது. இறப்பின் பேரச்சம் அங்கு அறவே கிடையாது. -க.பா


நற்பண்பும், நேயமும் எல்லையற்றவை. எல்லையற்ற பெரும் பரப்பில்தான் விடுதலையைப் பற்றிய முழு அறிவு கிட்டுகிறது. -சா

இரவின் மடியில் கமுக்கமான ஒரு மகிழ்ச்சி உள்ளது. என் நெஞ்சத்தில் அதை நிரப்பிக் கொண்டு, நாளெல்லாம் அதைச் சுமந்து செல்லவிடு. -எ

இறைவனைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.நீங்கள் எனது தந்தை என்பதை மட்டும் நானறிவேன். -ஆ

நண்பனே, வேனிற் காலத்தின் முதல் தென்றலாக நீ என்னிடம் வந்துள்ளாய். -ஈ