2 இரவும் பகலும் பிறப்பினால் சைவர் அவர். மருள்நீக்கியார் என்ற பெயர் உடையவர். சிறந்த சைவவேளாளர் குலத்தில் உதித்தவர். இப்போது சைனர்களிடையே பெரிய ஆசிரிய ராக எழுந்தருளியிருக்கிறார். ஆயினும் அவருக்கு உடம் போடு வந்த சைவ உணர்ச்சி முற்றும் நீங்கவில்லை. வழி வழியே சிவ பூசையும் சிவ வழிபாடும் செய்யும் குடியிற் பிறந்தமையால் அவர் உள்ளத்துக்குள்ளே சிவபெருமா னுடைய நினைவு இருந்துகொண்டே இருந்தது. தம்முடைய புதிய சூழ்நிலையில் சைனசமய முறைப்படியே செய்ய வேண்டியவற்றை அவர் செய்துகொண்டிருப்பார்; அவர் மனமோ பழமையிலே பதிந்து சிவபெருமானுடைய நினை வாகவே இருக்கும். உள்ளத்துக்குள்ளே தோற்றும் அந்த நினைவை மாற்ற முயல்வார்; முடியாது. நம்முடைய தந்தையார் இந்த நேரத்துக்குச் சிவபூசை செய்வார். நீரால் இறைவனை ஆட்டிப் பூவால் அருச்சனை செய்து தூபதீபம் காட்டுவார். இப்போது அந்த வழக்கத்தை நான் கைவிட் டேன்' என்ற நினைவு அவர் மனத்தை உறுத்தும். அவர் சிவ பூசை செய்யாவிட்டாலும் சலமும் பூவும் தூபமும் அவர் நினைவிலிருந்து போகவில்லை. " . இத்தகைய போராட்டத்திலிருந்து அவரை மீட்கத் திருவருள் பாலித்தான் சிவபெருமான். அவருடைய தமக்கையாகிய திலகவதியாரும் தினந்தோறும் இறைவ னிடம், "அடியேன்பின் வந்தவனை ஆட்கொண்டருள வேண்டும்" என்று விண்ணப்பித்துக்கொண்டு வந்தார். எல்லாச் சமயத்திலும் இருப்பவன் ஒரே இறைவன்தான். சைனசமயத்தார் தம் மரபுப்படியே ஒழுகிப் பிறருக்குத் தீங்கு இயற்றாமல் வாழ்ந்தால் அவர்களுடைய வழிபாட் டையும் ஏற்றுக்கொள்வான் இறைவன். தருமசேனர் சைனசமய நூலறிவிலே சிறந்தவராக நின்றாலும், அந்தச் சமயத்தார் அவரை ஆசிரியராகக்
பக்கம்:இரவும் பகலும்.pdf/11
Appearance