இரவும் பகலும் ஓதித் திருநீற்றைத் தம் தம்பியாருக்குக் கொடுக்க, அவர் அதனைப் பணிந்து ஏற்று அணிந்துகொண்டார். அப்போதுதான் விடிந்துகொண்டிருந்தது. திருப்பள்ளி எழுச்சிக்குரிய காலம் அது. அகத்தே உள்ள இருளும் புறத்தே உள்ள இருளும் ஒருங்கே கரைய, இறைவன் திருமுன் திலகவதியார் செல்ல, மருள் நீக்கியாரும் சென்றார். திருவாளன் திருநீறு தரித்தபோதே அவர் தருமசேனராக இருந்தது மாறி மருள்நீக்கியார் ஆகிவிட்டார் அல்லவா? தம் தமக்கையாரைக் கண்ட அளவிலே அவருக்கு ஓரளவு ஊக்கம் உண்டாயிற்று. திருநீறு அணிந்தவுடன் ஏதோ புத்துணர்ச்சி உடம்பில் மூண்டது. திருக்கோயி லுக்குள் அடியெடுத்து வைத்தபோது வைத்தபோது அவர் பழைய உடம்பு மாறி வருவதுபோன்ற அனுபவம் உண்டாயிற்று. தம்மைப் படாத பாடு படுத்திய சூலை நோய்க்கு மருந்து அங்கே உறுதியாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. திலகவதியாரைத் தொடர்ந்து சென்றார். திருக் கோயிலை வலம் வந்தார். அப்போது வீசிய காற்று அவர் உயிருக்கே தண்மையைத் தந்தது. உள்ளே புகுந்தார். சந்நிதியை அடைந்தார். பல காலமாக மறந்து பிரிந்திருந்த தாயை மீட்டும் வந்தடைந்த குழந்தை போல ஆனார். செய்யத் தகாத காரியம் செய்து தம் சொந்த வீட்டைப் பிரிந்து பலகாலம் வேறிடத்தில் வாழ்ந்து மறுபடியும் தம் வீட்டை அடைந்தால் எப்படி உணர்ச்சி பொங்கி எழுமோ அப்படி எழுந்தது அவருக்கு. தம்முடைய உணர்ச்சியை யெல்லாம் கொட்டி ஓவென்று கதறவேண்டும் போல இருந்தது. இறைவன் திருமுன் விழுந்தார். அவருடைய உள்ளத் தில் பழைய நினைவுகள் கொந்தளித்தன. தம்முடைய
பக்கம்:இரவும் பகலும்.pdf/13
Appearance