உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவும் பகலும் உயிருக்கு இறுதியாக வந்த நோய்க்கு ஏற்ற மருந்து கிடைக்கும் இடத்தை அணுகிவிட்டோம் என்ற துணிவு உண்டாயிற்று. உணர்ச்சிக்குக் கரைபோட அவரால் முடியவில்லை. இறைவன் அருளும் அவருடைய இயற்கைச் செப்பமும் சேர்ந்து அவரைக் கத்திக் கூவிக் கதறுவதி னின்றும் தடுத்தன. அவர் உள்ளம் இப்போது திருந்தது. இறைவனுடைய அருள் நீரால் நனைந்திருந்தது. உணர்ச்சிவசப்பட்டு மலர்ந்திருந்தது.அங்கிருந்து நல்ல உருவத்தோடு கவிதை பிறந்தது. கூற்றாயின வாறு விலக்ககலீர்! கொடுமைபல செய்தன நான் அறியேன்; ஏற்றாய் அடிக் கே,இர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்; தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன்; அதி கைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே! " சனிந் இப்படிப் பத்துப் பாடல்களை அவர் பாடிவிட்டார். உணர்ச்சி விஞ்சும்போது தமிழ் அறிந்த அவருக்கு அவ் வுணர்ச்சி பாட்டாக வந்தது. அந்தப் பாட்டு அவருடைய வேதனையைக் காட்டியது, அவர் உள்ளத்தே சிவபெரு மான் இருந்து, வா,வா என்று அழைத்ததைக் காட்டியது. "நான் சைனனாக உடலளவில் வாழ்ந்தா லும் நெஞ்சத்தை உமக்கே இடமாக வைத்தேன். ஆண்டவனே! உம்மை ஒருபோதும் நினையாது இருந்தறி யேனே!" என்று பாடினார். "சலமும் பூவும் தூபமும் நான் எடுத்துப் பூசை செய்யவில்லையே யன்றி, அவற்றை நான் மறந்தறியேன். தமிழோடு இசை பாடுதலையும், உன் நாமத்தை நாவிலே உரைத்தலையும் நான் மறக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/14&oldid=1726753" இலிருந்து மீள்விக்கப்பட்டது