பக்கம்:இரவு வரவில்லை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. முல்லையும் வண்டும்

முல்லை: வண்ண மலராம் கன்னியர்கள்
வாழும் சோலை இடைப்புகுந்து
கண்ணை முத்தி விழிமலர்த்திக்
காதல் இன்பம் பரிமாறிப்
பண்ணை மீட்டி இசைபெருக்கிப்
பாடிப் பாடி வருவண்டே!
பெண்ணாள் என்னோ டென்றென்றும்
பிரியா திருக்க மாட்டாயோ?
1

வண்டு: பொல்லா உலகம் இவ்வுலகம்!
பொதுமை ஏற்க இணங்காமல்
அல்லும் பகலும் உழைத்துழைத்தே
அகந்தைப் பேணல் கடனென்னும்
இல்லம் உண்டே! இல்லத்தில்
இன்பச் சிறுவர் பலருண்டே!
செல்வம் தேடி இல்லோம்பல்
என்றன் செயலாம்! மறைந்தாயோ?
2

முல்லை: எட்டுத் திக்கும் பறந்தோடி
இனிக்க இனிக்க இசைபாடிக்
கட்டே இன்றித் திரிகின்றாய்?
காட்டுக் களாவே! கருவண்டே!
கட்டி யணைத்தே வாழ்வித்துக்
காதற் கதைகள் பலபேசி
விட்டுப் பிரிந்து செல்வதுவோ
மேலோர் செய்கை? வேண்டாவே!
3


17

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/26&oldid=1179793" இலிருந்து மீள்விக்கப்பட்டது