பக்கம்:இரவு வரவில்லை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வண்டு : ஊரை விட்டுச் செங்கதிரும்
உயர்குன் றடைந்தே பிரிகிறதே!
காரைக் கிழித்து வருமதியும்
காலை ஓடி மறைகிறதே!
சாரை போன்ற மலையருவி
தடங்கடல் ஓடிக் கரைகிறதே!
யாரை யாரே பிரியா தார்?
யானென் செய்கோ? கலங்காதே!
4

முல்லை: சுற்றி வந்து முணுமுணுத்துத்
தோளை அணைத்தே இதழ்சுவைத்து
நற்றாய் மறக்கச் செயல்மறக்க
இன்பம் தந்தாய் நல்வண்டே!
உற்றார் எனக்கே உனையன்றி
உளரோ சொல்லேன்? என்றென்றும்
வற்றா இன்பம் தந்தென்னை
வாழ வைக்க மாட்டாயோ?
5

வண்டு : உன்னோ டிணைந்தே வாழ்ந்திருக்க
உள்ளம் உண்டு! மனையாட்டி
சின்ன மக்கள் பொறுப்பாரோ?
அண்டை அயலார் சீறாரோ?
என்ன செய்ய? நம்வாழ்க்கை
இதுதான்! இதுதான்! ஒருபோதும்
என்னை யன்றி நீவாழாய்!
அறிவேன்! என்றும் மறவேனே!
6



18
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/27&oldid=1179795" இலிருந்து மீள்விக்கப்பட்டது