பக்கம்:இரவு வரவில்லை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்னலிடை யாரெல்லாம் குடமேந்தி வந்தார்;
விழியாலே நகைகாட்டி அசைந்தாடிச் சென்றார்!
அன்றின்றும் அழியாத ஓவியமே! வாழ்வே!
அங்கெல்லாம் உனைக்கண்டேன்! மறப்பதுண்டோ காதல்?


அலைபாயும் கடலோரம் வளைபாயும் நண்டு;
பைந்தாழை அருகிருந்தே அடைகாக்கும் பேடை;
வலைபாயும் கடல்மீது படகாடிப் பாயும்;
மணற்பரப்பு நெடுங்கரையில் பொன்பூக்கும் புன்னை!
மலைபாயும் மானொக்கும் நெய்தல்வாழ் பெண்கள்
வரிவளைக்கைக் கோலேந்தி வாகுயர்த்தி நிற்பர்;
சிலைபாயும் விழிபாய; இசைபாயும் பேச்சில்!
செந்தமிழே! உனைக்கண்டேன்! மறப்பதுண்டோ காதல்?


70
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/76&oldid=1179769" இலிருந்து மீள்விக்கப்பட்டது