பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. விண்வெளியில் மனிதன்

நீலவான் முகட்டை முட்டித்
தாக்கிடு வோமே - இந்த
நீண்டவெளி தன்னைச் சுற்றிக்

கொள்ளை கொள்வோமே'

என்று கவிமணி அவர்கள் மனித இனம் காணும் கனவை-அவனது விடுப்பூக்கத்தை (Curiosity)-வெளியிடுகின்றார். ஆனால், அமெரிக்காவின் எக்ஸ்புளோரர் என்ற துணைக்கோள் வான மண்டலத்தில் கதிர் வீச்சு வளை சூழல் இருக்கின்றது என்றும், அது உயிரினங்களுக்கு விபத்துக்களை விளைவிக்கக் கூடியதென்றும் கண்டறிந்துள்ளது. இதனைக் கொண்டு மனிதன் தான் சந்திர மண்டலத்தை எப்பொழுதாவது அடைய முடியுமா என்று ஐயுற வேண்டியதில்லை. அங்ஙனம் ஐயுறுவது சிறுபிள்ளைத்தனமாகும். ஏனெனில், பயன்படத்தக்க ஒவ்வொரு கண்டுபிடிப்பும் சில பிரச்சினைகளைத் தரத்தான் செய்கின்றன. அவற்றை மனிதன் தன் மதிநுட்பத்தால் எப்படியாவது சமாளிக்க முயன்றாக வேண்டும். இதற்குப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி, கோடிக் கணக்கான ரூபாய் பொருட் செலவு, பலருடைய உயிரிழப்பு ஆகியவை நடைபெற வேண்டியிருக்கலாம். ஆகவே, சந்திர மண்டலத்தை விரைவாகவோ எளிதாகவோ அடைய முடியும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. இது ஒருவகை முடிவு.

மற்றொரு வகையில் சிந்தித்தால், முதன் முதலாக வெற்றிகரமான வி-2 இராக்கெட்டு பறந்து பதினைந்து ஆண்டுகளில் வானவெளியில் ஒரு துணைக்கோள் அயனப்


1. கவிமணி : மலரும் மாலையும்.