பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

இராக்கெட்டுகள்


மனிதர்களைக் கொண்ட துணைக்கோள்களை இயக்கும் தொழிலிலும், இன்று அமைக்கப்பெற்று வரும் விண் வெளியில் செல்லும் விமானங்களே இயக்கும் தொழிலிலும் இன்னும் வாய்ப்புக்கள் தக்கவாறு ஏற்படவில்லை. இதில் பங்கு பெறும் விமானிகள் மிகச்சிறந்த, நிபுணர்களாக இருத்தல் வேண்டும். இதில் பங்குபெற்று வல்லவர்களாக விரும்பும் இளைஞர்கள் பெளதிக இயல், வேதியியல், கணிதஇயல், வானநூல், மருத்துவ இயல் ஆகிய துறைகளில் தேர்ச்சிபெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இவற்றுக்கு மேல் இவர்கள் இராக்கெட்டுத் துறையிலும் மேலான கல்வியினைப் பெறுதல் வேண்டும்.

இன்று விண்வெளிப் பயணஇயலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலோர் பொறியியல் வல்லுநர்களாகவே உள்ளனர். குறிப்பாக மூன்று துறைகளைச் சேர்ந்த பொறியியல் நிபுணர்கள் திட்டமிட்டு, உருவமைத்து, இறுதியாக இராக்கெட்டுக்களே அமைக்கின்றனர். அமெரிக்காவிலும் இரஷ்யாவிலும் இன்று இத்தகைய கல்வியினைப் பல்கலைக்கழகம் அளித்து வருகின்றது.

ஒரு சமயம் சோவியத் அறிவியலறிஞர் ஒருவர் இரஷ்யாவில் எங்காவது ஓரிடத்தில் வாழ்ந்து வரும் சிறுவன் ஒருவன் சந்திரனில் கைவீசி நடக்கும் முதல் மனிதனுக இருக்கலாம் என்று கூறியதாகப் படிக்கின்ருேம். அவர் சொன்னது தவருகவும் இருக்கலாம். அவர் குறிப்பிட்ட சிறுவன் பிரிட்டனிலும் இருக்கலாம் : அமெரிக்காவிலும் இருக்க நிறைய வாய்ப்பு உண்டு. இந்திய மண்ணில் பிறந்த உங்களில் ஒருவனுகவும் ஏன் இருத்தல் கூடாது?