பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

இராக்கெட்டுகள்

இராக்கெட்டுடன் ‘எதிர்-இராக்கெட்டுகள்’ (Retro-rockets) எனப்படும் இராக்கெட்டுகளை அதன் பக்கவாட்டில் அமைக்கின்றனர். இந்த எதிர்-இராக்கெட்டுகள் இயங்கும் பொழுது முதன்மை இராக்கெட்டு செல்லும் திசைக்கு எதிராகச் சுவாலைகளைப் பீச்சி முன்னோக்கிச் செல்லும் இயக்கத்தைக் குறைக்கின்றது. தவிர, முதன்மையாகவுள்ள இராக்கெட்டுடன் வானொலிச் செய்தித் தொடர்பு கொள்ளும் ஏற்பாடுகளும் அமைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் துணையால் பூமியினின்றும் வானொலிச் சைகைச் செய்திகளைப் (Radio signals) பெற்று இராக்கெட்டினைத் தக்கவாறு செலுத்தலாம்.

மற்றொருவகை வழிகாட்டி அமைப்பில் இராக்கெட்டினை மிகச் சரியான முறையில் குறிவைத்து அனுப்புவதாகும். இராக்கெட்டின் உட்புறத்தில் அமைக்கப்பெற்றுள்ள ஜைராஸ் கோப்பு (Gyroscope) என்ற பொறியமைப்பு ஏற்பாடு இராக்கெட்டு சரியான பாதையில் செலுத்துவ தற்குத் துணைசெய்கின்றது. ஜைராஸ்கோப்பில் மிகப் பளுவான சக்கரம் ஒன்று உள்ளது; அது வேகமாகச் சுழலச் செய்யப்பெறுகின்றது. வேகமாகச் சுழலும் ஜைராஸ் கோப்பு தற்சுழற்சியின் அச்சின் (Axis) திசையில் ஏற்படும் எந்த மாற்றத்தையும் எதிர்த்துத் தடுத்து நிறுத்துகின்றது. திட்டப்படுத்திய பாதையை விட்டு இராக்கெட்டு திரும்பிச் சென்றால், ஜைராஸ்கோப்பு ஏற்பாடு கட்டுப்படுத்தும் கருவிகளை இயக்கி அதனைச் சரியான திசைக்குத் திரும்பவும் கொண்டுவந்துவிடும்.

உலகிலேயே மிகச் சிறந்ததும், பல திறப் பயிற்சியுடையதும், மிக இலேசானதுமான வழிகாட்டி அமைப்பு மனிதனுடைய மூளையாகும். போர் விமானத்தில் செல்லும்