பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

8.

இராசராச சேதுபதி

சொல்வம்பு - வீண்பேச்சு, பகைத்துறு - பகைவர்களாகிய மரத்தின் அடியை, கல்லும் - தோண்டியெடுக்கும்; மன் - தலைவன்; கன கிரி மேகம் சூழ்ந்த மலை; படைத்த - வாய்ந்த கொங்கையுடையார் - கொங்கு நாட்டையுடையவர்: திருவஞ்சியார் - அழகிய வஞ்சி நகரத்தை யுடையவர்; கொல்லம் படைத்தவர் - கொல்லம் என்னும் ஊருக்கு உரியவர்; சேரலர் - சேரநாட்டு மன்னர், மெய் - உண்மை:கோதையர்மாலை சூடிய மகளிர் ; கொங்கு - சேரமன்னனுக்குரிய நாடு, வஞ்சி, கொல்லம் என்பன சேர மன்னனுக்குரிய ஊர்கள்; செல் வம்பு அடைத்தநீண்ட கச்சினால் கட்டப்பெற்ற, கொங்கயுைடையார் - முலையுடைய வர்; திருவஞ்சியார் - அழகிய வஞ்சிக் கொடிபோன்ற இடையுடையார்: கொல் அம்பு அடைத்தவர் - தீண்டி வருத்தும் அம்பு போன்ற கண்ணை மறைத்தவர்; சேரலராதல் சேராத தன்மையுடையராதல்.

11G

சிலபோற் றிகழ்நுத னல்லார்தங் கற்புஞ் செயுக்தவமும் நி2லபோற்றி யாள்கின்ற சீராச ராச னெடுங்கிரியீர் மலேபோற் றன மிருந் தாலு மிடையே வறுமையுறும் க லபோய்க் கொடுங்கோல் கரம் பிடித் தார்க்கிது கட்டுரையே.

சிலை - வில்; மாதர் கற்பும் மாதவர் செய்யும் தவமும் நிலைபெறுதல் ஆட்சியின் மேன்மையை விளக்கும். நிலைபோற்றி ஆள்தல் - நிலைக்கு மாறு அரசாளுகை, மலைபோற்றனம் - மலைபோற் குவிந்த பெரிய செல்வம், இடையே - வாழ்வினிடையில்; வறுமையுறும், தரித்திரம் வந்து சேரும்; கலை போய் - நல்லகலைகளினாலாய அறிவு கெட்டு: கொடுங்கோல் கரம் பிடித்தார் - தீய ஆட்சியை மேற்கொண்டார்: கட்டுரை - எடுத்துச்சொல்; மல்ைபோற்றனம் - மலைபோன்ற முலை; இடையே வறுமையுறும் - இடையானது இல்லை என்னும்படி மெலிந்து காணும்: கலைபோய் - ஆடயைானது நெகிழ்ந்து; கொடுங்கோல் கரம் பிடித்தார் - கொடிய அம்புபோ ன்ற கண்ணைக் கையால் பொத்தியவர் .

117

இருவாரி சூழ்ந்த தனுக்கேர்டி காவல னென்றுமலர்த் திருவார் முகவைப் பதராச ராசன் சிலம்பனையாய் பொருவா ரிராக்கதத் தானேயென் பால்விடும் பொற்பறிந்து செருவாரிலங்கையி லங்கையுள் ளாயென்று தேறினனே,