பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 77.

L53

மண்ணுேட்ட கில்லா வளனுங் குள னும் வயற்பெருக்கும் தண்ணுேட்ட வோடையு நீள் செம்பி நாடன் றரியலரை விண்னேட்ட வென்றவன் சீராச ராசன் வியன் கிரியிா கண்ணுேட்ட மில்லவர் கெஞ்சங்கல் லாயினர் கண்டனமே.

மண் - பூமி, ஒட்டகில்லா வளன் - நீங்காத வளப்பம்; தண் ஒட்ட ஓடை - குளிர்ந்த நீரோடும் ஒட்ை; மண்வளம், குளம், வயற்பெருக்கு : ஒடை ஆகியவை பெருகியிருக்கும் செம்பிநாடு; நீள் - பெருக்கம், மிகுதி: தரியலர்- பகைவர்; விண்ணோட்ட - வானுலகத்தில் ஓடிப்போகும்படி: வியன் கிரி - பரந்த மலை; கண்ணோட்டம் இல்லவர் - இரக்கமில்லா தவர்; நெஞ்சம் கல்லாயினர்- மனம் இ ர ங்கா த வ ராய் க் கல்மனம் படைத்தவராயினர்; இரக்கமில்லாதவர் மனம் கல்லாயிருத்தல் இயல்பே. யன்றோ ? கண் ஓட்டம் இல்லவர் - கண் பார்வையை வெளியிடாமல். மறைத்தவர்; நெஞ்சம் - மார்பு; கல் ஆயினர் - மலை போன்ற முலை யினையுடையவராயினர்.

154

முதுகர வேற்ற பெரும்புவி காத்து முறைசெலுத்து வதுகர வாதவன் சீராச ராசன்.வரையனே யிர் . இதுகர வேயென் புயமுலைக் கும் முலை யீர் துரின்றிர் மதுகரங் கட்கு மதுகர கல்கினிர் வண்மைகன்றே.

முதுகு அரவு ஏற்ற பெரும் புவி - ஆதிசேடன் என்னும் பெரும்பாம்பு தன் முதுகில் தாங்கியிருக்கும் பெரிய பூமி: முறை செலுத்துவது - நீதி முறையில் அரசாள்வது; கரவ. தவன் - தவறாதவன்; இது கரவே இது வஞ்சகமே யாகும். புயமுலைக்கு - தோள்களாகிய மு ல் ைல க் காட்டிற்கு; முலை ஈந்து நின்றீர் - முல்லையைத் தந்து நின்றீர்; முலை - முல்லை; மதுகரம் - வண்டு; மது - தேன்; கரம் நல்கினிர் - கையால் வார்த்தீர்; வண்மை - வள்ளல் தன்மை, கொடை, என் புயம் உலைக் கும் முலை ஈந்து நின்றீர் - என் புயங்களை வருத்தும்படி செய்யும் முலைகளை வெளிப்படுத்தித் தந்துள்ளிர்; மதுகரங்கட்கு -வண்டுகளுக்கு: வண்டு போன்ற கண்களுக்கு; உமது கரம் நல்கினிர்- உமது கைகளைத் தந்துள்ளீர்; அதாவது கைகளால் கண்களை மறைத்துள்ளிர் என்றபடி,