பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இராசராச சேதுபதி

155

பல்லவ ருக்கும் வளவர்க்குஞ் சேரர்க்கும் பாண்டியர்க்கும். சொல்லெவ ருக்கு மிலாப்புகழ்ச் சேதுத் துறைக்கதிபன் கல்லவருக் குங்ல் லானராச ராச ன விர் வரையார் வல்லவ ருக்கியல் பாமா லுறுகண் மறைப்பதுவே.

பல்லவர் - பல்லவ மன்னர், வளவர்- சோழர்; சேரர் - சேரமன்னர்; பாண்டியர் - பாண்டிநாட்டு மன்னர்; பல்லவர் முதலிய எல்லா அரசருக் கும் இல்லாத பெரும் புகழுடையான் சேதுமன்னன்; சேதுத்துறைக்கு அதிபன் - சேது காவ ல ரா கி ய சேதுபதி; வல்லவருக்கு உறுகண் மறைப்பது இயல்பா மால் - வன்மை படைத்தவருக்குத் துன்பங்களைப் போக்குவது இயல்பாகும். வல் அவருக்கு - சூதுகாய் போன்ற முலையை உடையவருக்கு உறுகண் மறைப்பது - தமக்கு உற்ற கண்களை மறைப் பது . இயல்பாம்ால் - இயல்பா குமா ? முறையாகுமா என்றபடி.

156

விடையர் செருவென்ற சீராச ராசன் வெற்பனையாய் இடையர் குயவன் குடங்கொண்டு மென்பா லினிதளிக்க அடைவு கெடவிங் கிருகா துடற்று மருங்கருங்கட் கடையரு மென் பாற் குடங்கைக் கொளுள்செயல் காட்டலென்னே.

விடையர் - வேறுபாடுகொண்டவர், செருக்காளர்; வெற்பு - மலை; இடையர் -இடைச்சாதியார், ஆடுமாடுகளை வளர்ப்போர்; குயவன் - மட்பாண்டத் தொழிலோன்; மென்பால் - மென்மையான நல்ல பாலை; அடைவுகெட - முறைமையின்றி: உடற்றும் - பூசலிடும்; அருங்கருங்கட் கடையர் - கொடிய தீய கள்ளைக் கொண்டிருக்கின்ற கீழோர். பாற் குடம் - பால் நிரம்பிய குடம்; கைக்கொளும் - கைப்பற்றும்; இடைச் சாதியார் குயவன் செய்த குடத்தில் இனிய பாலை நன்கு தரவும் முறை டியின்றிக் கள்ளைக் கொண்டிருக்கின்ற கடையர் இனிய பாற்குடத்தைக் கைப்பற்றுதல் என்ன வினோத்ம் என்றவாறு. இடையர் - மெல்லிய இடையினையுடைய பெண்டிர், குய வன் குடம்கொண்டும் - முலையாகிய பெரிய குடத்தைக் கொண்டும்; என்பால் இனிது அளிக்க - என்னிடம் மகிழ்வுடன் தர; அடைவுகெட - கண்டார் செயல்முறை கெடும்படி: இருகா து. உட்ற்றும் *- இரண்டு காதுகளோ டும் சென்று சென்று போரிடும்;