பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்கள் இயற்றிய நூல்களுள் இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை, கிதைத் தாழிசை, ஆத்திசூடியுரை, பாரதநீதி வெண்பா முதலியன அச்சில் வராமை தெரியவந்தது. நண்பர் கமலையா அவர்களும் நானும் கோவை நூலை முதலிற் பெற்று அச்சிடலாம் எனக் கருதினோம். எங்கள் வேண்டுகோளுக்கு வித்துவான் இராமநுஜையங்கார் அவர்களும் மகிழ் வோடு இணங்கினார். அவர்களுக்கு எங்கள் நன்றியும் வணக்கமும் உரியனவாகுக.

'பாடலை மட்டும் அச்சிட்டால் அகப்பொருள்துறை பற்றிய இரு பொருள்படப் பாடியுள்ள பகுதிகள் எல்லார்க்கும் எளிதில் விளங்கா . ஆதலால் பாடல்களுக்கு வேண்டும் அளவு குறிப்புரை எழுதவேண்டும்’ என நண்பர் அவர்கள் எனக்குத் தெரிவித் தார்கள். மகாவித்துவான் அவர்களும் அங்கங்கே சில சில பாடல்களுக்குப் பொருள்களைக் குறிப் பாகச் சுட்டியுமிருந்தார்கள். அதனால் ஆசிரியர் கருத்தோட்டம் எனக்குப் புலப்பட வாய்ப்பாகியது.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நான் பணிபுரிந்த காலத் திலேயே குறிப்புரையை 400 பாடல்களுக்கும் எழுதி முற்றுவித்தேன். என்னுடன் பயின்ற ஒருசாலை நண்பரும் இப்பொழுது மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழியற் புலத்திலே ஆய்வாளராக இருப்பவரு மாகிய புலவர் திரு. ந. சேதுரகுநாதன் அவர்கள் நான் எழுதிய குறிப்பு ரையை முற்றும் நோக்கிச் சிற்சில திருத்தங்களையும் தெரிவித்துதவி னார்கள். நண்பர் அவர்களுக்குப் பெரிதும் நன்றிக் கடப்பாடுடையேன்.

என் மேற்பார்வையிலேயே நூல் அச்சாக வேண்டும் என்று திரு. கமலையா அவர்கள் விரும்பியதால் தஞ்சாவூரில் அச்சுப்ப3 நடந்து இப்பொழுது நிறைவெய்துகிறது.

நாணிக்கண் புதைத்தல் என்னும் ஒருதுறையில் ஏனையோர் முன்பே பாடியிருப்பினும் மகா வித்துவான் இராகவையங்கார் அவர்களின் கற்பனைத்திறனும் கவியாற்றலும் நூலகத்து எங்கும் பரக்கக் காணலாம். தம்மை ஆதரித்து வந்த சேதுபதிகளிடம், குறிப்பாக இராச இராசேசுவர

சேதுபதிகளிடம் எவ்வளவு அன்பும் நன்றியும் உடையவர்களா யுள்ளார்கள் என்பது பாடல்தோறும் பளிச்சிடக் காணலாம். பாடல்களின் பெரும்பகுதியும் இராசராச சேதுபதியவர்களின் மெய்க்கீர்த்தி

மாலைதான். சேதுபதிகளின் வெற்றிச்சிறப்பு, கொடைச்சிறப்பு, அரசாட்சி மேன்மை, அவர்கள் செய்த பல்வேறு வகையான அறங்கள், தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் பேணிப்போற்றும் பெரும்பண்பு என்று இவையெல்லாம் தம் நன்றியுணர்வு வெளிப்படத் தமிழ் எடுத்தியம்பியுள்ள திறம் கற்பாருள்ளத்தைப் பிணிக்க வல்லதாம்.