பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. இராசராச சேதுபதி

வருந்துதலைச் செய்த முழுவலிக்கு: முழுவலி என்றது பெருவலிமை புடைய முலை என்றபடியாம். இன் ந ஞ் சு க் கைநல்கினே - இனிய நஞ்சு போன்ற கண்ணைக கைமறைப்பிலிருந்து விடுவித்துத் தருமாயின்.

192

தேவைகன் மங்கையொ டாடான புல்லை திருச்சுழியல் யாவையுங் காக்கின்ற சீராச ராச ைெழில் வரைவாய்க் காவையும் வெல்குழ லீர்பெருங் காமக கடற்பட்டுரீர் கோவையங் கைப்பற்ற லாமோ முழுவலிக் கொம்புவிட்டே

தேவை - இராமேச்சுரம்; மங் ைக - திருவுத்தரகோசமங்கை; ஆடானை - திருவாடானை, புல்லை - திருப்புல்லாணி, திருச்சுழியல் - ஒரு சிவதலம். கா - சோலை: காவையும் வெல்குழல் - சோலையின் பசுமை நிறத்தையும் வெல்லும்படியான கரிய கூந்தல்; காமக் கடல் - யாவரும் விரும்பும் படியான் கடல், காமமாகிய கட்ல். முழுவலிக் கொம்பு விட்டு கோவை அங்கைப் பற்றலாமோ - கடலில் விழுந்தோர் நன்கு வளர்ந்த கொம்பைப்பற்றி நீந்தாது கோவைக் கொடியைக் கைப்பற்ற லாகுமா. முழுவலிக்கொம்பு - நன்கு வலிமை பெற்ற யானைத் தந்தம் போன்ற முலை; கொம்புவிட்டு - முலைகளை வெளிப்படுத்தி: கோவை அங்கைப் பற்றலாகுமோ - கண்ணை உளளங்ை கயினால் பிடிக்கலாமோ? அதாவது கண்களைக் கையால் மறைக்கலாமா என்றபடி,

193

திருந்திருக் கைச்சொலு மந்தனர் வாழ்வு சிறந்த கலை மருந்திருக் கைக்கென ஆர்முற்று மீத்த வளககுடியிற் றருந்திருக் கைப்புகழ்ச் சீராச ராசன் றமிழகத் துப் பொருந்திருக் கைகல் கிலாய் மலைமீது புகவிடுததே.

இருக்கு - இருக்கு வேதம்; கலை மருந்திருக்கை கலையாகிய அமுதத்தை அருந்தி வாழ்த்ல்; மருந்து - அமுதம்: ஈத்த கொடுத்த: வளக்குடி - செல்வக்குடி, தரும் திருக்கைப் புகழ் - கொடுக்கின்ற அழகிய கையின் புகழ்: தமிழகத்து - தமிழ் மலையில்; மலைமீது புகவிடுத்துப் பொருந்து இருக்கை நல்கிலாய்ட்- மலையிலே ஏறும்படி செய்து உதவி யாக உம்மிடமுள்ள இருகைகளையும் தந்தீரில்லை. திருக்கு - கண்: பொரும் திருக்கை நல்கிலாய் - போரிடும் கண்களைக் காட்டினாயில்லை. மலைமீது புகவிடுத்து - மலை என்றது முலைகளை.