பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11}{ இராசராச சேதுபதி

201

கொன் முன்னு வேற்படை வீரத் தலைமைக் குடியிலுள்ள தன் முன் ன வன்.ரகு காத னிவனென்று சாற்றுமிசைச் சொன் முன்ன தாக வணிராச ராசன் ருெடர்வரையீர் என் முன் புகுடி மறைத் தீர் பிறப்பிட மேதெரித்தே.

கொன்முன்னு வேற்படை - அச்சத்தைத் தோற்றுவிக்கும் வேலா யுதம்: வீரத் தலைமைக்குடி - வீரத்தால் சிறப்புற்ற மறவர் குலம்: முன்னவன் - முன்னோன்; ரகுநாதன் - இரகுநாத சேதுபதி, அமிர்த கவிராயரால் ஒருதுறைக் கோவை பெற்ற சிறப்புடையவர். இசைச் சொல் - புகழ்மொழி; முன்னதாக முற்பட குடி பிறந்த குடும்பம்: өгт sйт முன்பு உம் பிறப்பிடத்தைத் தெரிவித்துப் பிறந்த குடியைச் சொல்லாது மறைத்துவிட்டீர் என்பது வெளிப்படை. என்முன் புகுடி மறைத்தீர். புகுடி-புருவம்; புருவத்தோடு கூடிய கண்; பிறப்பிடம்அம் மகளிர் பிறப்பிடமாகிய குறிஞ்சி, மலை; மலை என்றது இங்கே முலையினை; தெரித்து - வெளிப்படுத்தி.

202

இருக்கைத் தெரிகின்ற வேதியர் காவலன் ஏற்றிகல்வோர் தருக்கைத் தவிர்க்கின்ற சீராச ராசமன் றள் வரைவாய்ப் பெருக்கத் தெரிய மிருமைவல் லார் வம்பு பேணல்விட்டும் திருக்கைத் திருக்கை யுடையரென் றவது சீர்த்ததன்றே.

இருக்கு - இருக்கு வேதம்; வேதியர் - வேதம் வல்ல அந்தனர்; ஏற்று இகல்வோர் - எதிர்ந்து வந்து போரிடுவோம்; தருக்கு - செருக்கு: தாள் வரை - மலையடிவாரம்; பெருக்கத் தெரியும் இருமை வல்லார் - விளக்கமாகத் தெரியும் அறிவுபடைத்த இருபொருள் உணரவல்லார்; வம்பு பேனல்விட்டு - புதுமையைக் கொள்ளுதல் விடுத்து; திருக்கைத் திருக்கையுடையார் என்று ஆவது - மாறுபாட்டையே காணும் இயல்பின ராதல்; சீர்த்தது - சிறப்புடையது. இருமை - இருபொருள்; பெருமை: வம்பு - புதுமை, கச்சு: திருக்கு - மாறுபாடு, கண். பெருக்கத் தோன்றும் இருமை வல்லா ர் - பெருத்துத் தோன்றும் இருவல் போன்ற முலையினர்; வம்பு பேணல் விட்டு - கச்சினால் கட்டிப் பாதுகாத்தலை விடுத்து ; திருக்கைத் திருக் கையுடையராதல் - கண்ணை அழகிய கையிடத்தே கொண்டிருப்பது; சீர்த்தது அன்று - முறையாகாது.