பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவ ராயரி னத்துவி தத்தின்

தத்துவ நாடெங்கு முய்த்துணர் வித்தாய் பத்த மிலாத மகா வீரர் கொள்கை

பற்றுந லோரையும் வைத்துயர் வித்தாய் சுத்தநல் லேசு தெளித்த மதத்திற்

றோயும் பலோரையும் மார்பி லணைத்தாய் ஒத்தம கம்மது ரைத்த நெறிக்கே

உமறுப் புலவரை யுய்த்தளித் தாயே ! H

வில்வித்தை வேல்வித்தை மேவிச் சிறந்தாய்

மேதினிக் கொத்த மரக்கல மூர்ந்தாய் பல்வித்த கத்துந் தலைக்கொள நின்றாய்

பார்வளங் கண்டுநல் லேர்வளங் கண்டாய் கல்விக்கண் மெல்லிய லாரை வளர்த்தாய்

கற்றவர் வீறக் கழகம் அமைத்தாய் செல்வத்தி னாலிவண் வாழத் தெரித்தாய்

சீரரு ளாலுயர் வீடுந் திறந்தாய் ! 每

தேவினை நெஞ்சிற் றிகழவும் வைத்தாய்

சித்தியை ஞானியர் செப்பவும் வைத்தாய் பா வினை நூலிற் சுவைக்கவும் வைத்தாய்

பத்தியைத் தொண்டர் புகழ்க்கிடை நட்டாய் பூவினைக் காக்கென வேத்தியல் சொற்றாய்

புத்தியைக் காக்கப் புலவரை யுய்த்தாய்: யாவினைக் குங்குடி மக்களை வைத்தாய்

எத்தனை செய்தனை நற்றமி முன்னே !

- மகாவித்துவான் ரா. இராகவையங்கார்