பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறை க் கோவை 141

291

குருவெள்ளி யென்பவர் செய்திட்ட நூலிற் குறித்தமுறை தருவெள்ள லில்புகழ்ச் சீராச ராசன் றடவரைவாய்த் திருவெள்ளி யாரிரும் புள்ளார் தராக்கட் சிறப்புடையார் பெரிதுள்ள மாதங்கத் தார்பித் தளை தலைப் பெய்தனரே.

குரு - வியாழன், பி ரு க ற் ப தி; வெள்ளி - சுக்கிரன்; வியாழனும் வெள்ளியும் அரச நீதிமுறை நூல் செய்துள்ளவராவர்; முறை தரு - நீதி செலுத்துகிற, அரசாளுகிற, எள்ளல் இல் புகழ் - இகழ்ச்சியில்லாப் பெரும்புகழ், தாழ் வில்லாத புகழ், திரு எள்ளியார் - திருமகளை இகழும் படியான அழகு படைத்தவர்; இரும்புள்ளார் - புள் - வளையல்; பெரிய கைவளை அ ரிை ந் த வ ர்; த ராக் கண் சிறப்புடையார் - பாராத கண்களைப் பெற்ற சிறப்புடையவர்; கைகளால் கண்ணை மறைத்தமை சுட்டியவாறாம்; பெரிதுள்ள - பெரிதான மாதங்கத்தார் - யானையை யுடையவர்; யானைத் தந்தம் போன்ற முலையினை உடையார், பித்து அளைதலைப் பெய்தனர் - காம இச்சையால் நான் மயக்கமுறுதலைத் தந்தனர். வெள்ளி, இரும்பு, தரா, தங்கம், பித்தளை என்னும் உலோகப் பெயர்களை இப்பாடலில் நயமுற அமைத்துப் பாடியுள்ளமை காணலாம். பித்தளை தலைப்பெய்தனர் - பித்தளையைக் கொண்டுள்ளனர்.

292

எல்லா வரிசுங் தொழுஞ்சேது வேந்தனெண் னெண்கலையும் வல்லார் தரந்தமங் தேர்ந்தீத்த வள்ளன் மதுரகவிக் கல்லால் வியவாத வன்ராச ராச னணி வரைவாய் கல்லார் கலியணி யார்குறிஞ் சிப்பாட்டை கல்கினரே.

அரசு - அரசர், எண்ணெண்கலை - அறுபத்து நாலுகலைகள் தரம் தமம் - தகுதி தகுதியின்மை, உயர்வு தாழ்வு: ஈத்த கொடை தந்த மதுர கவி - இனிய பொருள் நயம் வாய்ந்த பாடல்; நால்வகைக் கவி வகைகளுள் இஃது ஒன்று. நல்லார் - நல்லவராகியவர். பெண்டிர்; கலி - கலித்தொகை: குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டுள் ஒன்று. இவ் விரண்டும் முறையே எட்டுத் தொகை, பத்துப்பாட்டுகளுள் அமைந்த அகப்பொருள் இலக்கியங்கள். நல் ஆர் க லி அளியார் - அழகிய கண்னைத் தாரார்; ஆர்கலி - கடல், கண்; குறி ஞ் சி ப் பா டு - மலை; முலை; குறிஞ்சிப்பாட்டை நல்கினர் - முலைகளைத் தந்தனர் என்பதாம்.