பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Х மகா வித்துவான் ரா. இராகவையங்கார்

மாண்புமிகு பாஸ்கர சேதுபதி மகாராசா அவர்கள் இரா ை யங் காருடைய புலமைத் திறத்தை மெச்சித் தம் அவையில் தலைமை மகா வித்துவானாக்கினார். இவருக்குப் பல்லக்கு முதலிய வரிசைகளையும் நல்கினார். சமத்தான தர்ம மகமை நிதியிலிருந்து பசலிதோறும் ஆயுட் கால பரியந்தம் ரூபாய் 635 சம்மானமாகத் தரவும் உரிமைப் பத், ! பதிவுசெய்து தந்துள்ளார். அப் பத்திரத்தில் இராகவையங்கார் அவர் களுடைய பலதுறைப் புலமையையும் பாஸ்கர சேதுபதி அவர்கள் எடுத்துரைத்துப் பாராட்டியிருப்பது ஈண்டுக் காணத் தக்கதாம்.

நமது சமஸ்தானத்தில் பிறந்து வளர்ந்து நமது சமஸ் தானத்து அன்னப் பிரபாவத்திேைலயே தமிழ்க் கல்வியில் பூரண பாண்டித்தியமுடையராய், ராவ்பதுாார் பி. அரங்கநாத முதலியார் முதலிய பல கல்வியிற் பெரியோர்கள் மிகச் சிறப்பித்து எழுதிய மகாவித்துவானுய் அநேக வருடங்களாக நமது சமஸ்தானத்துத் தலைமைத் தமிழ் வித்வானாயுள்ள தாங்கள் தமிழ் நூலுரைகள் முதலியன செய்கின்றதனாலும் தமிழிலுள்ள அரிய பெரிய விஷயங் களைப் பலர்க்கும் உபந்நியசித்தலாலும் அனேகர்க்குப் பூர்விகத் தமிழ்ப் பாஷையைப் போதித்துவருதலாலும் கிடைத்தற்கருமையா யுள்ள பழைய தமிழ் நூல்களைத் தேடிச் சேர்த்தலாலும் அவற்றைப் பரிசோதித்தலாலும் வெளியிடுதலாலும் இன்னும் பல நன்முயற்சி களாலும் தமிழ்ப் பாஷையை நன்ருய் வளர்ப்பவர்களாயும் நமது சமஸ்தானத்துச் செந்தமிழ்ப் பரீகூடிாதிகாரத் தலைவராயும் நமது சமஸ்தானத்து வித்வத் அங்கத்தில் பரம முக்கியராயும் இருத்தலை ஆலோசித்து ............... திரமான சம்மானமாக இப்பத்திரத்தின் மூலம் நம்மால் கொடுக்கலாயிற்று * ==

இப் பத்திரத்தில் பாஸ்கர சேதுபதி அவர்கள் இராகவையங்சார் அவர்கள் தமிழ்ப் புலமையிலும் தமிழ்ப் பணியிலும் ச்ேது சமஸ்தானத்தில் எவ்வளவு சிறப்புடையராய் விளங்கினார் என்பதனை எடுத்துக்காட்டி யிருத்தல் காணலாம். -

சேதுவேந்தர் பேரவைக்கு வடமொழி, தமிழ், இசை முதலிய பல துறைகளிலும் வல்ல பெரும்புலவர்கள் அடிக்கடி வந்து தத்தம் கல்வித் திறத்தை வெளிப்படுத்திப் புகழொடும் சேதுபதிக்ளிடமிருந்து பெற்ற பெரும் பொருளொடும் திரும்பிச் செல்வது வழக்கமாயிருந்தது. அக் காலங்களில் இராகவையங்காரும் உடனிருந்து மகிழ்ந்து தம் கல்வி

  • பத்திரத்தின் செய்திகளை முழுமையாக இக் கட்டுரையின் இணைப் பில் காணலாம்.