பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 இராசராச சேதுபதி

331

இனமுங் குடியும் படையு மரணு மெவையுமுள்ளோன் சினமுங் கொலையும் மடியும் கடிந்தவன் செய்கையொப்ப மன முஞ் சொல்லு முளராச ராசன் வரையினிலே தனமும் பணமும் படைத்தார் கடன் மட்டுக் தந்திலரே.

இனம் . சுற்றம், மடி - சோம்பல்; கடிந்தவன் - போக்கியவன்; செய்கை - செயல்; எண்ணம், சொல், செயல்கள் ஒத்த தன்மையன், உள்ளம், உரை, உடல் என்னும் முக்கரணங்களாலும் துாயன் என்ற படி: தனம் - செல்வப்பொருள், முலை; பணம் - பொற்காசு, பாம்பின் படம்: அல்குல்; தனதானியம் முதலிய செல்வம் படைத்தவர் கடன்மட்டும் தந்தாரில்லை என்பது வெளிப்படை, கடல் மட்டும் தந்திலர் - கடல் போன்ற கண்ணை மட்டும் வெளிப்படுத்திக் காட்டினாரில்லை; தனமும் பணமும் படைத்தார் - முலையும் பாம்பின் படம் போன்ற அல்குலையும் பெற்றுள்ளார்.

832

மாதா கபாலி மருவிய கன்னி வனசைகலை யாதார வாணி யிவர்சே வடிக ளநுதினமும் மீதாக வைத்துத் தொழுராச ராசன் மிளிர்கிரியிர் குதாக கல்கினி ரம்பங்கை கல்கலிர் தோகையரே.

மாதா - தாய்; கபாலி - சிவபெருமான்; கபாலி மருவிய கன்னி - பார்வதி; வனசை - செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள்; கலை ஆதார வாணி - கலைகளுக்கு எல்லாம் ஆதாரமாயுள்ள கலைமகள்: சேவடிகள் - சிவந்த திருவடித் தாமரைகள்; அது தினமும் - எந்நாளும்: மீதாகவைத்து - தலைமேல் வைத்து, தலையால் வணங்கி, கு தாக நல்கினிர் - மாறுபட்ட கருத்துடன் பொருள் தந்தீர்; அம்பு - நீர்; அம்பு அங்கை நல்கலீர் - உங்கையால் நீர் வார்த்துந் தந்திலிர். இது மேற் போக்கான பொருள்; தோகையர் - மயில்போன்ற சாயல் படைத்த பெண் ; சூது அகம் நல்கினிர் - சூதுகாய் போன்ற மு ைல க ைஎ மார்பிடத்தே தந்தீர்; அம்பு - அம்பு போன்ற கண்; அங்கை நல்கலிர் மறைத்துள்ள அழகிய கையை விடுத்துத் தந்தீரில்லை; மறைத்துள்ளீர் எனறபடி.