பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 இராச ராச சேதுபதி

தந்துளிர், உரிமைப்பத்திரத்தை வழங்குவீர் என்பது வெளிப்படை. மன் நகிலம் தந்துளிர் - மார்பில் பொருந்திய முலையைக் கொடுத்துள்ளிர் : பத்திரம் - வாள், கண்.

355

திரிக்கப் படாகன் னெறியிற் றிகழ்கின்ற சேதுபதி பிரிக்கப் படாவளத் தான்ராச ராசன் பெருமலைவாய் தெரிக்கப் பெறவித் துணையா வரையுங் தெரியவைத்தும் அரிக்கய லாகின்ற கையருக் கென்னுள்ள மார்வமின்றே.

திரிக்கப்படா நன்னெறி - மாறுபாடில்லாத நல்வழி; பிரிக்கப்படா வளம் வகைப்படுத்தி அறிய இயலாத பெருஞ்செல்வம்; தெரிக்கப்பெறு ஆவித்துணை யாவரையும் தெரியவைத்தும் - ஆவித்துணை - உயிர்த் துணை; அரிக்கு அயலாகின்ற கையர் - பகைவரைக் காட்டாது வேறு பட்டிருக்கிற கீழோர்; ஆர்வம் - விருப்பம். தெரிக்கிப்பெறா இத் துணையாவரையும் தெரியவைத்தும் - வரை - மலை, முலை; அரிக்கயல் -செவ்வரி படர்ந்த மீன் போன்ற கண். கையர் - கையையுடையவர்.

35 (3

பொற்கை வழுதிக் கொப்பாகப் புவியைப் புரந்துகடு கிற்கை வழாத வன் சோடச தான கிதிவழங்கு மற்கையி ெைனங்கள் சீராச ராசன் வரையிடத்தே

பொற்கைவழுதி - பொற்கைப் பாண்டியன்; நீதியை நிலைநாட்டத் தன்கையையே துணித்ததனால் பொற்கை பெற்றவன்; புவியைப் புரந்துபூமியைக் காத்து; நடு நிற்கை - நடுவுநிலையில் நிற்றல்; வழாதவன் - தவறாதவன்; சோடசதான நிதி வழங்கும் கை, மற்கை என்க. சோ டச தானம் - பதினாறுவகையான தானம்; அவையாவன : பசு, நிலம், எள், நெய், வெள்ளி, உப்பு, நெல், உடை, வெல்லம், தங்கம் என்பவை தச தானம் என்றும் இவற்றுடன் ஆசனம், விளக்கு, குடை, செருப்பு, படுக்கை, பழம் என்னும் ஆறும் சேரச் சோடச தானம் என்றும் உரைப்பர். சோடசம் - பதினாறு; மல் - வலிமை; கற்கை - படித்தல்; கட்கை களவு; பொல்லாது - தீங்கு; கல்கை - முலையிடத்தே கை, கட்கை - கண்ணுடைய கை. பொலலாது - குற்றமுடையது.