பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 இராசராச சேதுபதி

செயச்சால் - வயல்களில் உழுத உழுபடைச் சால்; வளை - சங்கு: மெய்ச்சார்பு இனிய தனம் - உண்மையாக வந்து சேர்ந்த இனிய பொருள். சுவை காண்ட்ல்-அனுபவித்தல்: கைச் சாயகமொடு நின்றாய்கையில் அம்புடன் நின்றாய்; மெய்ச்சார்பு இனிய தனம் - மார்பிலே சேர்ந்துள்ள இனிய முலை; சுவ்ை - இன்பம்: சாயகம் - அம்பு, கண்.

з85

சேற்கலை யாதகண் ம்ானர் மடல்வரச் செய்துமலை மேற்குல வும்மிள ஞாயி றெனக்கரி மிதிவரும் குற்கன மானுங் கொடைராச ராசன் ருெடர்வரைவாய்ப் பாற்க லயந்தக் துளிர்மன் னுததியப் பான்மறைத்தே.

சேல் - கெண்டைமீன்; மானார் - பெண்கள்; குலவும் - விளங்கும்; இளஞாயிறு - காலைக் கதிரவன்; கரி - யானை, இவரும் . ஏறி நடத்தி வரும் ; சூற்கணம் - சூல் கொண்ட மேகம்; மானும் - ஒக்கும்; பாற்கலயம் தந்துளிர் மன்னு ததி அப்பால் மறைத்தே என்பது வெளிப்படை. ததி - தயிர்; பாற்கலயம் - பாலுள்ள செம்பு, முலை; மன் உததி அப்பால் மறைத்தே என்க. உததி - கடல், கண்.

386

நினைப்பருந் தெய்வத் திணையடிப் போதிற்றன் னெஞ்சை வைத்தே எனப்பெரும் போதும் பணிசெய்த பாற்கர் வேந்தன்றவர் த்னைப்பொரும் பாக்கியஞ் சீராச ராசன் றமிழ்வரைவாய் உனப்பெருங் கோப்பெண் டெனவுரை யார்செல்வ முற்றென்னையே.

நினைப்பருந்தெய்வம் - எண்ணுவதற்கு அருமையான தெய்வம்; இணையடி - இரண்டு திருவடி அடிப்போது - திருவடித்தாமரை, எனைப் பெரும்போதும் - எல்லாக் காலங்களிலும்; பணிசெய்த கடமை - iற்றிய: பாக்கியம் - புண்ணியம்: செல்வம்; ப்ொருளைப் பெற்றும் என்னபயன்; உன்னைப் பெருங்கோப்பெண்டு என்று உரையார் என்பது நான்காமடியின் மேற்போக்கான பொருள். பெருங்கோப்பெண்டு -- அரசி; கோப்பெண்டு - கண்ணையுடைய பெண்; கண்ணை மறைத்துள் னாள் என்பது குறிப்பித்தவாறு. கோ - கண் ; செல்வம் - தனம், முலை.