பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 185

யிடம் மேலெழுந்து; அதாவது முலை வெளிப்பட்டு; சேரற்கண் - சேரனுக்குரிய இடம் மலை - முலை: கேர் மாறல் - கண் பார்க்க மறுத்தல்; கண்ணை மறைத்தல்; என்னையே. - என்ன பயனaம்.

- =

397

சீரான தண்புக லுாருறங் காப்புளி சேருமொரு காரான மாமுக இனத்தொழுஞ் சேதுக்குக் காவலன்வெல் பேரானே மீதிவர் சீராச ராசன் பிறங்கலன்னிர் போரானே மீச்செல்வ ரேதிட்டி வாயிற் புகுகையென்னே.

புகலூர் - திருப்புகலூர் என்னும் தலம்; உறங்காப்புளி இலை குவி யாத புளிய மரம்; காரானை மாமுகன் - விநாயகன்; இவர் - ஏறிச் செலுத்துகிற; பிறங்கல் - மலை; போரானை மேலே செல்பவர் திட்டி வாயிலிற் புகுகை என்ன காரணம் என்பது:வெளிப்படை. ஆனைமுலை; திட்டி வாயில் புகுகை - சிறிய வாசலில் செல்லுகை; கண்ணிடத்தே கை சென்று சேர்கை; அதாவது கண்ணை மறைக்கை.

898 கார்ப்பா லுள கொடை யெல்லாக் தமது கரத்தமைத்துச் சீர்ப்பா லிரணிய கர்ப்பம் புரிந்தவர் செம்மறெப்வத் தேர்ப்பா கனைத்தொழும் சீராச ராசன் செழுங்கிரிவாய் பார்ப்பாரைப் பற்றி முனிவரை விட்டதென் பாவையரே.

கார் - மேகம்; கரம் - கை; இரணிய கர்ப்பம் - பொன்னாற் செய்த பசுவின் வயிற்றினுள் புகுந்து வெளிவரும் சடங்கு; செம்மல் - தலைவன்; தெய்வத்தேர்ப்பாகன் - பார்த்தசாரதியாகிய கண்ணன்; பார்ப்பானை ஆதரித்து முனிவரைக் கைவிட்டது ஏன் என்பது வெளிப்படை. பார்ப்பார்கண், முனி வரை - கோபிக்கின்ற மலை, முலை. * =

899

அறமான சொல்லுஞ் செயலு நினைவு மமர்ந்தவரைத் திறவா னவரென்று தேறுந் தகைமையன் சேதுபதி மறவாணர் தொல்குடிச் சீராச ராசன் வரையிடத்தே உறவான வர்க்களி யில்லாகிக் கன்னெஞ் சுறுவதென்னே.

24