பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசராசேசுவர சேதுபதி

(1889–1928)

க. சி. கமலையா தோற்றம்

முத்துராமலிங்க சேதுபதி என்ற இராசராசேசுவர சேதுபதி 3-6-1889 ஆம் நாளன்று பிறந்தார். தந்தை புகழ்பெற்ற பாஸ்கர சேதுபதி, தாயார் சிவபாக்கியம் நாச்சியார். இவர் முத்துராமலிங்க சேதுபதி என்னும் பெயரைக் கொண்ட மூன்றாம் சேதுபதியா வார்.

முத்துராமலிங்கர் மூவர்

முதலாம் முத்துராமலிங்க சேதுபதி சுதந்திர மன்னராய் மறவர் நாட்டையாண்டவர். 1763 முதல் 1772 வரையிலும் 1782 முதல் 1795 வரையிலும் அரசாண்டவர். முகம்மதியர்கள் மதுரையையும் தஞ்சாவூரை யும் கைக்கொண்டபோதிலும் சந்தாசாகிப்பால் மறவர் நாட்டை அடக்க முடியவில்லை. ஆங்கிலேயர் - சந்தா சாகிப் சூழ்ச்சியால் சிறைப்படுத்தப் பட்டுச் சென்னையில் இறந்தார். இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி காலத்தில் ஆங்கில ஆட்சிக்குட்பட்ட ஜமீனாக இராமநாதபுரம் இருந்தது. முத்தமிழிலும் வல்லவராய் விளங்கிய இவர் 1873 ஆம் ஆண்டு

காலமானார்.

கல்வியும் கடமையும்

மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி என்ற இராசராசேசுவர சேதுபதி மதுரைச் சேதுபதி உயர்நிலைப்பள்ளியிலும் மதுரைக் கல்லூரியிலும் கல்வி பயின்றார் 1903 ஆம் ஆண்டில் இவருடைய தந்தை பாஸ்கர சேதுபதி காலமானதன் பிறகு முதலில் மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவிய பாண்டித் துரைத் தேவர் கண்கா னிப்பிலும், பிறகு மாவட்ட ஆட்சியாளர் பராமரிப் பிலும் இருந்தார். கடன்காரர்களுக்கு நிலங்கள் ஒற்றிவைக்கப்பட்டும் நீண்டகாலக் குத்தகைக்கு விடப்பட்டும் இருந்த இராமநாதபுரம் ஜமீனை மீட்டு நல்ல நிலைக்குக் கொண்டுவந்தார். பாஸ்கர சேதுபதியின் வள் ளன்மையாலும் பல்வேறு உதவிகளினாலும் கடனுக்குள்ளாயிருந்த சமஸ்தானம் இவருடைய காலத்தில் சீரடைந்து செழித்தது.

இவர் 1908 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்து கொண்டு 1909 ஆம் ஆண்டு முதலாவது ஆண்பிள்ளைக்குத் தந்தையானார். வேல்ஸ் இளவரசர் (பின்னர் அரசரானவர்) வந்தபொழுது அப்பொழுது கவர்