பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சி. கமலையா XX1X

பெரும் பாக்கியம். என்ன கைம்மாறு செய்யப் போகிறார்கள் உலகோர். நன்றிமறவாது இருப்பார்களேயாயின் அதுவே சிறத்த தாகும்.

தங்கள் அன்புள்ள, பி. இராஜராஜேசுவர சேதுபதி தாமதத்திற்கு மன்னிக்க . . .

பாவலர் இராச ராச சேதுபதி

சேதுகாவலர் தமிழ்க் காவலருமன்றோ! தமிழைப் புரப்பது மட்டு

மன்றித் தமிழில் பாடவும் வல்லவர் இராசராச சேதுபதி என்று அவ்வப்

பொழுது பாடிய பாடல்களினின்று தெரிந்து கொள்ளலாம்.

மதுரையில் என். வி. சுந்தரராசன் என்பவர் வழக்கறிஞர். கண்ணில் வந்த நோய்க்குக் குணம்பெற இராசராசேசுவர சேதுபதியிடம் உதவி நாடினார். உதவியும் கிடைத்தது. நன்றி தெரிவித்த சுந்தரராசனுக்கு சேதுபதி ஒரு வெண்பா மூலம் பதிலனுப்பினார்.

கண்ணில் வருநோயைக் கடியப் பொருளுதவி பண்ணியதன் நன்றிதனைப் பாராட்டி - உண்னும் அமிழ்தின் இனிய அறவுரைகள் சொன்னான் தமிழ் தழையும் சுந்தரரா சன்."

காலஞ்சென்ற இராமநாதபுரம் ராஜா, இராஜராஜேச ! முத்துராமலிங்க சேதுபதியின் துாண்டுதலால்-வேண்டுகோளால்ஆணையால் என்று சொல்லவே விரும்புகிறேன், இராமநாதபுரம் மாவட்டம் பற்றிய சிறிய நூல் என்னால் எழுதப்பட்டது.

என்று இராமநாதபுரம் மாவட்டக் கல்வி மேலாளராக இருந்த டி. பி. கிருஷ்ணசாமி தம்முடைய நூலில் எழுதுகிறார். இராமேசுவரம் திருப் புல்லணை போன்ற திருப்பதிகளுக்கெல்லாம் சென்றுவிட்டு இராமநாத புரம் சேர்ந்து விடைபெறுமுகத்தான் கிருஷ்ணசாமி இராஜராஜே கவச சேதுபதிக்கு ஒரு வெண்பா எழுதியனுப்பினார் ,

இரும்பிடரி நாகத் தெழில்தலைமேல் தோன்றும் அரும்புகழ்சேர் அண்ணல்! அணிதோய் - திருமார்ப ஆர்க்குந் திரைசூழ்ந் தலைக்குந் துறையனைத்தும் பேர்க்குந் துளியுன் புகழ்,

_ _ _ - S TT S T S

  • செந்தமிழ்ச் சிறப்பு.