பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியிட்டுள்ளது. சிற்றிலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சி, வடிவம், பரப்பு, தொகை முதலிய அனைத்தையும் பற்றி மிக விரிவாக ஆராய்ந்து வெளியிட்ட ஒரே பதிப்பகம் மணிவாசகர் பதிப்பகம் என்பதை நினைந்து பெருமைப் படலாம். இந்நூல்களை ஊற்றுக்கண்ணாகக்கொண்டு, பல ஆய்வுகள் முகிழ்த்துள்ளன என்பதை நினைந்து மணிவாசகர் பதிப்பகம் பெருமை கொள்கிறது. அந்த வகையில் இந்த நூலையும் வெளியிடுவது எல்லா வகையிலும் போற்றுதற்குரியது. வெள்ளிவிழா நோக்கி வீறு நடைபோடும் மணிவாசகர் பதிப்பகம் இந்நாளில் நாவீறு படைத்த நல்ல கவிஞனின் சிறந்ததொரு படைப்பினைச் செம்பதிப்பாக வெளியிட்டுச் சிறக்கிறது.

இந்நூல் வெளிவர ஒல்லும் வகையில் உதவியவர்களும் மணிவாசகர் பதிப்பக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுமான பேராசிரியர் மு. சண்முகம்பிள்ளை அவர்களையும் அறிஞர் கமலையா அவர்களையும் பாராடடுகின்றேன். நீண்ட நெடிய கனவுகளை நனவாக்கி வரும் தமிழ், பல்கலைக் கழகச் சிறப்புநிலை பேராசிரியராகத் திகழ்பவர் சண்முகம் பிள்ளை. ஆராய்ச்சி அறிஞரும் சிறந்த பதிப்பாசிரியருமாகிய பேராசிரியர் வைய புரிப்பிள்ளை வழியில் பதிப்புப்பணி புரிந்துவரும் மு. சண்முகம் பிள்ளை அவர்கள் இந்நூலுக்குக் குறிப்புரை எழுதி வளம் சேர்த்துள் னார்கள். பதிப்புப் பணியே தம் வாழ்நாள் பணியாகக் கருதி முழுமூச் சுடன் உழைக்கும் பதிப்பாசிரியர் மு. சண்முகம் பிள்ளையின் கைவண்ணம் இந்நூலில் பக்கந்தோறும் பளிச்சிடுகிறது. திரு. கமலையா அவர்கள் அரசு அலுவலிலிருந்து ஒய்வு பெற்றும் தமிழ்ப் பணியிலிருந்து ஓய்வு பெறாத 70 ஆண்டு இளைஞர்; சிந்தனையாளர்; திறனாய்வாளர். எந்த நல்ல செயலுக்கும் விதையாகவும் வேராகவும் அமைகின்றார். சேதுபதிகள் வளர்த்த தமிழை ஆராய்வதிலும் வெளிக்கொணர்வதிலும் வற்றாத ஆர்வமுடையவர். அவர்களுடைய நல்லெண்ணத்தாலும் தூண்டுதலாலும் ஒத்துழைப்பாலும் இந்நூலை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுத் தம் பதிப்புப்பணி வரலாற்றில் ஓர் அணியைச் சேர்த்துக் கொள்கிறது.