பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருநூல்களின் பாட்டுடைத் தலைவர் சாப்டூர் என்று பெயர் விளங்கிய மருதூர் ஜமீந்தார் நாயகசாமிகாமய நாயக்கர் அவர்களாவர். இக் கோவை நூல்கள் இக் கவிராயர் பாடிய 'பூதரவிலாச’த்துடன் சேர்த்து 1934 ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. மேலே சுட்டிய ஒருதுறைக் கோவைகளும் கட்டளைக்கலித்துறைப் பாக்களால் இயன்றனவே.

இரகுநாத சேதுபதி ஒருதுறைக் கோவை 400 பாடல்களைக் கொண்டதாயினும் இடையில் 89 பாடல்கள் கிட்டப்பெறவில்லை. இதன் அச்சு மூலநூல், உரை நூல்களில் 89 பாடல்களின்றியே காணப்படுகின் றன (311 - 399) . இக்கோவையாசிரியர் பாடிய நாணிக்கண் புகைத் தல் துறையையே எடுத்துக்கொண்டு முத்துராமலிங்க இராசராசேசுவர சேதுபதிபேரில் மகாவித்துவான் ரா. இராகவையங்கார் பாடிய 400 பாடல்களைக் கொண்ட ஒருதுறைக் கோவை முழுமையாயுள்ளது.

இனி, இராசராசசேதுபதி ஒருதுறைக்கோவை உருவான வரலாற் றினை நோக்குவோம். மகாவித்துவான் ரா. இராகவையங்கார் இக் கோவையின் பாட்டுடைத்தலைவராகிய இராசராச சேதுபதியின் தந்தை யார் பாஸ்கர சேதுபதியின் காலம் முதல் சமத்தான வித்துவானாக விளங்கியவர். இவர் மகனார் சண்முகராசேசுவர நாகநாத சேதுபதி காலத்தும் சமத்தானப் புலவராய் இலங்கியவர். பாஸ்கர சேதுபதி சிறந்த கல்வியாளர்; தமிழுக்கும் இந்து சமயத்துக்கும் அரணாக விளங்கி யவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தைப் பாண்டித்துரைத் தேவருடன் சேர்ந்து நிறுவிய புரவலர்; பெருங் கல்வியாளர்; அறம்பல புரிந்தவர்; புலவர்களுக்கு வாரிவழங்கிய வள்ளல். கலைமகள் விழாவாகிய நவ ராத்திரித் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியவர்.

பாஸ்கர சேதுபதி மகாராசா புகழுடம்பு பெற்றபின் பட்டத்திற்கு வந்த முத்துராமலிங்க சேதுபதி என்னும் இராசராசேசுவர சேதுபதி இள வயதினராயிருந்தார். அவர் 1910ஆம் ஆண்டு உரிய வயது வரவே ஆட்சிப்பொறுப்பை நேரடியாகக் கவனிக்க முற்பட்டார். அந்த ஆண்டுக் கோடைக் காலத்தில் இராசராசசேதுபதியவர்கள் சிலகாலம் திருக்குற்றா லத்தில் தங்குவதற்காகப் புறப்பட்டார். சேதுபதியவர்கள் வெளியூர் செல்லும்போதும் சமத்தான மகாவித்துவானும் தம் ஆசிரியருமாகிய மகா வித்துவான் ரா. இராகவையங்கார் அவர்களையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கம். மன்னர் பரிவாரமும் மகா வித்துவான் அவர்களும் இரயிலில் இராமநாதபுரத்திலிருந்து திருக்குற்றாலத்திற்குப் புறப்படலா பினர். அச் சமயம் அங்கு வந்த வேம்பத்துார்ப்புலவர் சிலேடைப்புலிப் பிச்சுவையரும் அவர்களுடன் சேர்ந்து பயண்மாயினார்.