பக்கம்:இராஜேந்திரன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜேந்திரன்

செய்துகொண்டு வரச் சொல்வது என் மனத்திற்குச் சற்றும் பிடிக்கவில்லை. தாங்கள் சொன்னபடி பூநீரங்கநாதரைச் சேவித்து வர வேண்டியது அவசியமென்று வைத்துக் கொண்டாலும் பூநீரங்கநாதர் பக்திக்காகப் பரமபதம் கொடுக்கிருரா அல்லது நாம் செய்துகொள்ளும் அலங் காரத்துக்காகப் பரமபதம் கொடுக்கிருரா கேவலம் தேவடி யாள்களல்லவா பொதுவாகக் கோவிலுக்குப் போகும்போது பெருமாளேச் சேவிக்கவரும் நூற்றுக்கணக்கான ஆடவர்கள் மயங்கும்படி செய்யும்பொருட்டாகப் பிரத்தியேகமாய் விசே வித்த அலங்காரங்களேச் செய்துகொள்வார்கள். அந்த அலங்காரத்தில் ஈடுபட்டு ஏமாந்து வரும் ஆடவர்களேத் தட்டிப் பறித்து ஒட்டாண்டியாகச் செய்வதன் கிமித்தம் அவர்களுக்கு அந்த அலங்கார விசேஷங்களெல்லாம் தேவைதான். தனது பதியின் மங்களத்தையும் பகவத் தரிசனத்தையும் அபேகரித்து அவற்றிற்காக மட்டும் கோவிலுக்கு வரும் குல ஸ்திரீகளுக்கு அந்த வீண் அல்ங். காரங்கள் எதற்காக பகவான் நமது மனப்பக்குவத்தைக் கவனிக்கிருரா இந்த அலங்காரங்களைக் கவனிக்கிருரா?

ரங்கம்மாள் : என்னடி, அதிகப் பிரசங்கி! இது எதற்கு, அது எதற்கு இதற்குக் காரணம் என்ன, அதற்குக் கார ணம் என்ன? என்று ஒவ்வொன்றுக்கும் காரண காரியங்கள் கேட்டு என் பிராணனே வாட்டுகிருய். உன் வயதில் எங்களே எங்கள் பெற்ருேர்கள் எப்படி நடக்கச் சொல்வார்களோ அப்படி மறு பேச்சுப் பேசாமல் நடந்து வந்தோம். நீ கேட் கும் பல கேள்விகளில் ஒரு கேள்வி கேட்டால் கூட எங்க்ள் பல் முப்பத்திரண்டும் கீழே விழும்படி தவடை மேல் அடிப்பார்கள்! அம்மாடி!'இதென்ன? இந்தக் காலத்துப் பெண்கள் அதிலும் நீ கேட்கிற கேள்விகளோ அபாரமா யிருக்கே! இதற்கெல்லாம் பதில் சொல்ல எங்கள் பெற்ருேர் கள் எங்களுக்குக் கற்பித்துக் கொடுக்கவில்லையடி யம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/13&oldid=660393" இலிருந்து மீள்விக்கப்பட்டது