பக்கம்:இராஜேந்திரன்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#85 இராஜேந்திரன்

சேர்ந்தார்க்ள் வந்தவுடன் கும்பலே யெல்லாம் துரத்தில் போகும்படி செய்து கொலே நடந்த இடத்தைப் பார்த் தார்கள். சங்கநாத் கும்பலே அறைக்குள் போகாமல் தடுத்து வைத்திருந்தா ராதலால் போலீஸ் கமிஷன: ஆராய்ச்சி செய்வதற்குக் கஷ்டமில்லாமல் இருந்தது, போலிஸ் கமிஷனரும் சுப்பராயலு நாயுடுவும் பிணம் விழுந்து கிடந்த மர்திரியையும், காயங்கள் இருந்த மாதிரியை பும் கவனித்தார்கள். நூற்றுக் கணக்கான காயங்கள் விழ வேண்டிய காரணம் என்ன கொலை செய்தவன் ஒரே குத்தாகக் குத்துவான் அல்லது 10 தரம் குத்தக் கூடும். உடம்பெல்லாம் இப்படி அநேக நூறு காயங்கள் விழக் கார னம் என்னவென்று யோசித்துப் பின்வரும் விஷயங்களேப் பதிவு செய்துகொண்டார்கள்.

1. பிரேதத்தின் உடம்பில் விழுந்திருக்கும் காயங் களில் இரண்டொரு காயங்களே கொல்வதற்குப் போது மானவையாக இருந்தாலும்,அநேக நூறு காயங்கள் உடம்பு ஆதியந்தமும் விழுந்திருக்கின்றன.

2. இவ்வளவு காயங்கள் விழுந்திருப்பதால் அவர் அணிந்திருக்கும் உடுப்புகளால் அல்லாமல் வேறு அடை யாளங்களால் இன்னர்தான் கொலே உண்டார்களென்று பார்க்கச் சாத்தியமில்லை.

3. இதில் ஆச்சரியப்படக் கூடிய விஷயம் என்ன வென்ருல் உடம்பில் இவ்வளவு காயங்கள் இருந்தாலும் அணிந்திருக்கும் உடுப்புகளில் அக்காயங்கள் இல்லை யாத கால் கொன்றபின் உடுப்பு மாற்றப்பட் டிருக்கவேண்டும்.

4. ஆடு மாடுகள் வெட்டிய இடத்தைச் சுற்றிலும் எப்படி ரத்தப் பிரவாகமாக இருக்குமோ அப்படியே அங்கும் இருந்தது.

5. சத்தம் தோய்ந்த கைகள் சுவரில் தொட்டிருந்த திலிருந்து மிகவும் சிறிய கைகளாக இருக்குமென ஊகித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/179&oldid=660559" இலிருந்து மீள்விக்கப்பட்டது